fbpx
Connect with us

Cinemapettai

பூமிக்கடையில் கிளம்பிய புகை! பொதுமக்களுக்கு எச்சரிக்கை! ஊட்டியில் பரபரப்பு!

ooty_cinemapettai

பூமிக்கடையில் கிளம்பிய புகை! பொதுமக்களுக்கு எச்சரிக்கை! ஊட்டியில் பரபரப்பு!

சுற்றுலாத் தளங்களில் புகழ்பெற்ற இடமான ஊட்டி அருகே நீத்தி வனப்பகுதியில் கடந்த 10 ஆண்டுக்கு முன் பூமியிலிருந்து திடீரென புகை கிளம்பியது. இதனால் அந்த பகுதியில் இருந்த மரங்கள் செடி கொடிகள் எரிந்து சாம்பலாயின.

இதனைத்தொடர்ந்து புவியியல் வல்லுனர்கள் நடத்திய ஆய்வில், இங்கு புகை கிளம்ப எரிமலையோ அல்லது வேறு காரணமோ கிடையாது எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், 10 ஆண்டுக்குப்பின் அதே பகுதியில் மீண்டும் புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக்கண்ட பொதுமக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.

இதனையடுத்து, அங்கு விரைந்த குன்னூர் புவியல் துறை புவியியலாளர் மாரியம்மாள் அப்பகுதிக்கு சென்று அங்கிருந்த மண்ணை ஆய்வுக்காக எடுத்து சென்றார்.

இதுகுறித்து மாரியம்மாள் கூறுகையில், நீத்தி பகுதியில் புகை வருவது சாதாரண விஷயம். மக்கிய மரம் மற்றும் செடி கொடிகள் வெப்பத்தின் காரணமாக பூமிக்குள் எரிந்து கொண்டிருக்கும். அதன் புகை வெளியில் வருகிறது. எவ்வித ஆபத்தும் இல்லை என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் வனத்துறை அதிகாரிகளிடம் ஒரு மீட்டருக்கு மேல் பூமிக்கு அடியில் மண்ணை தோண்டி பார்க்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனையடுத்து, வனத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி வனத்துறையினர் புரட்டி போட்டனர். பள்ளங்களில் புதிய மண்ணை கொட்டி மூடும் பணிகள் மேற்கொண்டனர். இருப்பினும் புகை வரும் பகுதியில் பொதுமக்கள் கால்நடைகளை மேய்க்கவோ, கற்பூர இலைகளை சேகரிக்கவோ செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top