fbpx
Connect with us

Cinemapettai

தம் அடிச்சுட்டு தத்துவம் பேசும் ‘கொலைகாரன்’ பட நடிகை வீடியோ.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தம் அடிச்சுட்டு தத்துவம் பேசும் ‘கொலைகாரன்’ பட நடிகை வீடியோ.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் விஜய் ஆண்டனியின் ‘ கொலைகாரன்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை அஷிமா நார்வால்.

இவர் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில், சிகரெட்டை ஊதித் தள்ளும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

இதற்கு ரசிகர்களின் காரசாரமான கமெண்டுகளை பதிவிட்டனர். இதனால் நடிகை அஷிமா நார்வால் “ நான் ஏன் புகை பிடித்தேன் என்ற காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்!” என்று அதற்காக பெரும் விளக்கத்தையே தமிழில் பதிவிட்டுள்ளார்.

அதில் “மனிதர்கள் உறைவிடமாக இருக்கும் இந்த பூமியில் நாம் வாகனங்களின் மூலமாகவும் தொழிற்சாலைகளின் மூலமாகவும் மாசுகலந்த புகையை வெளியிடுகிறோம்.

அப்படி செய்யும் போதும் பூமி நமக்கு தீங்கு விளைவிக்காமல் நன்மையையே தருகிறது. எனவே ஒரு படத்திற்காக இடம்பெற்ற கதாபாத்திரத்திற்காகவே நான் புகை பிடிப்பது போல் போலியாக கற்றுக்கொண்டேன் என்ற உண்மையை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே இனியாவது பூமியை நேசித்து பார்ப்போம்!” என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு ரசிகர்கள் “தம் அடிச்சதுக்கு பெரிய தத்துவ ஞானி போல் விளக்கமளிக்கிறார்.

இப்படி யோக்கியம் மாதிரி பேசுற நீங்க ஏன் புகைப்பிடிப்பது போன்ற வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டீங்க?” என்றும் பல்வேறு விதமான கேள்விகளை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.

ashima-narwal-cinemapettai-3

ashima-narwal-cinemapettai-3

முழு வீடியோவை பார்க்க: Click Here

Continue Reading
To Top