Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜெயிலில் சிக்கன், சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை.. கோபத்தின் உச்சிக்கு சென்ற அதிகாரிகள்
சினிமா திரை உலகையே உலுக்கிய கொண்டிருக்கும், போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் பல முன்னணி நடிகைகள் வரிசையாக கைதாகி வருகின்றனர்.
கன்னட திரையுலகில் போதைப்பொருள் சர்வசாதாரணமாக உலாவி வருகிறது என்று பிரபல கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஜ் கொடுத்த புகாரின் பேரில் விழித்துக் கொண்ட மத்திய குற்றப்பிரிவு போலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதன் விளைவாக கடந்த மாதத்தில் பிரபல நடிகையான ராகினி திவேதி கைதானதை தொடர்ந்து பிரபல நடிகை சஞ்சனா கல்ராணியும் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சஞ்சனா கல்ராணி தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிறையில் அடைக்கப்பட்ட சஞ்சனா கல்ராணிக்கு சிக்கன் என்றால் ரொம்ப பிரியம் என்பதால் தனக்கு சிக்கன் வேண்டும் என்று, சிறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே அசைவ உணவு வழங்கப்படும் என்று மறுத்து விட்டனர்.
அதன் பின் மனதை தேற்றிக் கொண்ட சஞ்சனா கல்ராணி, சிறை அதிகாரிகளிடம் “சிக்கன் இல்லேன்னாலும் பரவாயில்லை சிகரெட்டாவது தாங்க” என்று அடம் பிடித்துள்ளார்.
செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவிக்கவே ஜெயிலுக்கு வந்த சஞ்சனா கல்ராணி அங்கேயும், சொகுசு வாழ்க்கையையும் போதைப்பொருளையும் எதிர்பார்ப்பதால் சிறை அதிகாரிகள் கடும் கோபத்தில் உள்ளனர்.
