புனே : எம் எஸ் தோனியை விட, புனே அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தான் அறிவு கூர்மையானவர் என புனே அணி உரிமையாளர் சஞ்சீவ் கோங்கா தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் தடைசெய்யப்பட்டதால், கடந்த ஐபிஎல் சீசனில் புனே அணியின் கேப்டனாக செயல்பட்டவர் தோனி. இந்நிலையில் இந்த சீசனில் புனே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அணி நிர்வாகத்தால் நீக்கப்பட்டு, ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக்கப்பட்டார்.

தற்போது இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ள புனே அணியின் செயல்பாடு குறித்து பேசிய அந்த அணி உரிமையாலர் சஞ்சீவ் கோங்கா, “தோனி மிக கூர்மையான அறிவு கொண்டவர். உலகின் சிறந்த விக்கெட் கீப்பர். இருப்பினும் ஸ்மித்தின் அறிவுக் கூர்மை தோனியை விட சற்று அதிகமாக உள்ளது.

போட்டி தொடங்குவதற்கு முன் புனே சாம்பியன் பட்டம் வாங்க என்ன செய்வதென ஆலோசித்தோம். அப்போது ஸ்மித் வீரர்கள் எப்படி தன் விக்கெட்டை இழக்கின்றனர் என்றும் அதிலிருந்து எப்படி தப்பிப்பது என விவரித்தார்.

அதோடு களத்திற்கு வரும் பேட்ஸ்மேன்கள் சூழலை புரிந்து கொள்ள முதல் 5 பந்துகள் வீணாக்கலாம் 20 பந்துகள் அல்ல என தெரிவித்தார்.” என ஸ்மித்தை புகழ்ந்து தள்ளியுள்ளார்.