ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐசிசி விதிமுறையை மீறி பந்தை சேதப்படுத்திய விவகாரம் பெரும் விவாத களமாகிவிட்டது. கிரிக்கெட் உலகில் கடந்த இரு நாட்களாக ஹாட் டாபிக் இது தான்.

கேமரன் பேன்கிராஃப்ட்

Cameron Bancroft

இளம் வீரரான பேன்கிராஃப்ட் தன் விரல்களுக்கு மத்தியில் மஞ்சள் நிற பேப்பர் கொண்டு பந்தை சேதப்படுத்தியது கேமராவில் பதிவானது. அதனை மைதானத்தில் உள்ள திரையிலும் காட்டினார். பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தான் பந்தை சேதப்படுத்தியது உண்மைதான் என பேன்கிராஃப்ட் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், ‘பேன்கிராஃப்ட்டின் இத்திட்டம் குறித்து தமக்கு முன்பே தெரியும்’ என கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார். மேலும், இதுகுறித்து தலைமைக்குழு பேசியதாக சொன்னார் ஸ்மித். ஐசிசி ஸ்மித்துக்கு ஒரு போட்டி தடையும் , பேன்கிராஃப்ட்க்கு 3 டி மெரிட் புள்ளிகள் அளித்துள்ளது. எனினும் “கிரிக்கெட் ஆஸ்திரேலியா” என்ன முடிவு எடுக்கும் என்பது தெரியவில்லை.

இவ்வாறு இந்த பிரச்சனை முடியமால் சென்று கொண்டு இருக்கும் நிலையில் கிரிக்கெட், படங்கள் என அனைத்தையும் கிண்டல் செய்யும் ட்விட்டர் பக்கம் ஒன்று விக்ரம் வேதா ஸ்டைலில் குறும்பாக ட்வீட் பதிவிட்டுள்ளார்.

Bancroft – Smith

வேதா : ஸ்மித்தா பேன்கிராஃப்ட்டா ? செஞ்சவனா, செய்யத்தூண்டுனவனா ? நீ யாரை சார் தண்டிப்ப ?

விக்ரம் : ஸ்மித் சொன்னான். பேன்கிராஃப்ட் செஞ்சான், அவன் வெறும் ஆயுதம் தான். ஸ்மித் எவ்ளோ பெரிய மனுஷனா இருந்தாலும் நான் அவனை தான் தூக்குவேன் .

இது தான் அந்த ட்வீட். இதனை பலரும் லைக் செய்தனர். மேலும் படத்தின் இயக்குனர்களான புஷ்கர் காயத்ரி கூட இதனை ரீ ட்வீட் செய்தனர்.

இந்நிலையில் ஒரு குறும்புக்கார ரசிகர் . மெயின் வில்லனா மறந்துட்டியே என்று பதில் கூறியுள்ளார்.

Lehman