ஒரு ஃபேனும் சின்ன ரூமும் போதும்… படக்குழுவை நெகிழச் செய்த அஜித் விசுவாசம்அப்டேட்ஸ்

ஒரு ஃபேனும் சின்ன ரூமும் போதும்… படக்குழுவை நெகிழச் செய்த அஜித் விசுவாசம்அப்டேட்ஸ்

இயக்குனர் சிவாவின் விவேகம் படத்தை தொடர்ந்து, அஜித் நடிக்கும் படம் விசுவாசம். இதற்கு முன்னரே, வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ந்து இருவரின் கூட்டணியில் படங்கள் வெளியாகி இருக்கிறது. நான்காவது முறையாக இக்கூட்டணி அறிவிக்கப்பட்டதும், ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தில் அஜித்தின் நாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

முதன்முறையாக அஜித்தின் படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர், ரமேஷ் திலக், மதுமிதா உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, படப்பிடிப்பே மே மாதத்தில் தொடங்கப்பட்டதால், தீபாவளிக்குள் முடிக்கப்படுவது கடினம் என்றே கூறப்படுகிறது.

விவேகம் படத்தின் விமர்சனம் சரியாக இல்லாததால், இப்படத்தில் இயக்குநர் சிவா அதிக கவனம் செலுத்தவே நினைப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. தீபாவளி ரேஸில் இருக்கும் சூர்யாவின் என்.ஜி.கே மற்றும் விஜய்62 படங்களின் படப்பிடிப்பு 40 சதவீதத்திற்கும் அதிகமாக முடிக்கப்பட்டு இருக்கிறது. அதனால், அவர்கள் படம் தீபாவளி ரிலீஸில் களமிறங்கினாலும், விசுவாசம் படம் இந்த ரேஸில் இடம்பிடிப்பது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. மேலும், நாயகி நயன்தாராவும், அரை டஜனுக்கும் அதிகமான படங்களைக் கையில் வைத்திருக்கிறார். தயாரிப்பாளர்கள் போராட்டத்தால் அவராலும் தொடர்ந்து கால்ஷீட் கொடுக்க முடியாத சூழலும் இருக்கிறது. இதனால், இப்படத்தின் ரிலீஸ் வரும் ஆங்கில புத்தாண்டை குறி வைத்தே இருக்கும் என படக்குழு தரப்பில் கிசுகிசுக்கப்படுகிறது.

சினிமா ஸ்டிரைக்குக்குப் பின்னர் தொடங்கப்பட்ட ஷூட்டிங்கின் 30 நாட்கள் கொண்ட முதல் ஷெட்யூல் சமீபத்தில் முடிந்துள்ளது. விரைவில் இப்படத்தின் செகண்ட் ஷெட்யூலைத் தொடங்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது. முதல் ஷெட்யூலை ஹைதராபாத்தின் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், ராஜமுந்திரியிலும் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர். அப்போது, மொத்த ஷெட்யூலையும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே நடத்த படக்குழு அனுமதி பெற்றிருக்கிறது.

ajith visuvasam
ajith visuvasam

ராஜமுந்திரியில் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்ட நிலையில், அஜித் தங்கியிருந்த அறை, பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குக்கு புக் செய்யப்பட்டது. இதை அஜித்திடம் எப்படி சொல்வது என படக்குழுவினர் திண்டாடவே, அதுகுறித்து கேள்விப்பட்ட அஜித் எனக்கு ஒரு சின்ன ரூமும், பேனும் போதும் என அஜித் அந்த அறையைப் பெருந்தன்மையாகக் காலி பண்ணிக் கொடுத்திருக்கிறார். இதனால் படக்குழுவினர் நெகிழ்ச்சியடைந்திருக்கின்றனர். அதேபோல், படத்தில் அஜித் இரண்டு கெட்டப்புகளில் தோன்றுகிறார். அதில் ஒன்று தர லோக்கல் கெட்டப்பாம். அதேபோல், அஜித் படம் என்றவுடன் நயன்தாரா மறுபேச்சு பேசாமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

Comments

comments