சிறுமி என்ற வார்த்தையை கேட்டாலே நம் நினைவுக்கு வருவது பாலியல் கொடுமைதாங்க. அந்த அளவுக்கு குழந்தைகள் மீதான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

சண்டிகரை சேர்ந்த பத்து வயது சிறுமி வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கிறார். அங்குதான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவள் வயிற்றில் ஏழு மாத கரு இருப்பதாக கூறினர்.

இது குறித்து பெற்றோர்கள் சிறுமியை விசாரித்ததில் அச்சிறுமியின் தாய் மாமா தினமும் தன்னை மிரட்டி தன்னுடன் உறவு கொண்டுள்ளதை சொள்ளியுள்ளாள்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கருவை கலைத்துவிட மருத்துவரிடம் கேட்டுகொண்டுள்ளனர். ஆனால் ஏழு மாத கருவை கலைக்க இயலாது என்று மருத்துவர்கள் சொன்னதால், சண்டிகர் மாவட்ட நீதிமன்றத்தில் இது தொடர்பாக பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் வழக்கினை ஏற்க மறுத்த நீதிமன்றம் ஏழு மாத கருவை கலைக்க இயலாது, அதனால் அக்குழந்தை பிறக்கும் வரை அதற்கான செலவுகளை அரசு ஏற்கும் என்று தீர்பளித்தது.

சிறுமிக்கு தற்போது அறுவை சிகிச்சை மூலம் பிரசவமாகி ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமிக்கும் அந்த குழந்தைக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

பிறந்த குழந்தையை தத்து கொடுத்துவிட சிறுமியின் பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். சிறுமிக்கு தான் கர்பமாக இருந்ததே தெரியாதாம், வயிற்றில் கட்டி அதனால்தான் அறுவை சிகிச்சை செய்கிறோம் என்று பொய் சொல்லி சிறுமியை சமாளித்துள்ளனர்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: மொத்த கதைல அந்த கல்ப்ரிட் மாமா என்ன ஆனானு தெரியலையே….!!!