ஏவிஎம்மை தூக்கி நிருத்திய விசு.. ரஜினி, கமலால் ஏற்பட்ட நஷ்டத்தை சமாளித்த சூப்பர் ஹிட் படம்

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கு மேலாக பல தரமான படைப்புகளை தயாரித்து முன்னணி நிறுவனமாக இருப்பது ஏவிஎம் புரொடக்சன்ஸ். அனைத்து விதமான கதைகளையும் தயாரிக்கும் ஒரே நிறுவனம் என்ற பெருமையும் இந்த நிறுவனத்திற்கு உண்டு.

மேலும் இவர்கள் ரஜினி, கமலை வைத்து மாறி மாறி பல திரைப்படங்களை தயாரித்து இருக்கின்றனர். அந்த வகையில் பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்து லாபம் பார்த்த இந்த நிறுவனத்திற்கு சில தோல்விகளும் இருந்துள்ளது.

அதாவது ரஜினியை வைத்து முரட்டு காளை மற்றும் கமலை வைத்து சகலகலா வல்லவன் போன்ற திரைப்படங்களை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்று இருந்தாலும் எதிர்பார்த்த அளவுக்கு லாபத்தை கொடுக்கவில்லை.

இதனால் இந்த தோல்விகளை சமாளிக்க முடியாமல் திணறிய அந்த நிறுவனத்துக்கு ஒரு சிறிய பட்ஜெட் திரைப்படம் மிகப்பெரிய அளவிலான லாபத்தை கொடுத்தது. யதார்த்தமான படைப்புகளை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வந்த விசு சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார்.

இந்தத் திரைப்படத்தை ஏவிஎம் நிறுவனம் மிகக் குறைந்த பொருட்செலவில் தயாரித்து. இதன் மூலம் போட்ட பணத்தை எடுத்துவிடலாம் என்று நம்பி இருந்த அந்த நிறுவனத்திற்கு ஆச்சரியம் தரும் விதமாக இந்த படம் பல மடங்கு லாபத்தை அள்ளிக் கொடுத்தது.

லக்ஷ்மி, ரகுவரன், மனோரமா, சந்திரசேகர் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்த இந்த திரைப்படம் குடும்பங்களை கவர்ந்த திரைப்படமாக பல நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதன்பின்தான் ஏவிஎம் நிறுவனம் இப்படியும் படங்களை எடுத்து லாபம் பார்க்க முடியுமா என்று யோசித்து இதே போன்று பல திரைப்படங்களை தயாரித்தனர்.

Next Story

- Advertisement -