Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட்ரா சக்க! லஷ்மி மேனனா இது? கீர்த்தி சுரேஷை மிஞ்சி விடுவார் போல.. வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக இருக்கும் நடிகைதான் லட்சுமி மேனன்.
இவர் சினிமாவிற்கு ‘கும்கி’ படத்தின் மூலம் அறிமுகமாகி தனது இயல்பான நடிப்பினால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
அதன்பின் வரிசையாக பல படங்களில் நடித்து வந்த நிலையில்,கொஞ்சம் கிளாமராக நடிக்க தொடங்கியதாலும், உடல் எடை அதிகரித்தாலும் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்துவிட்டது.
அதன்பின் தனது படிப்பில் கவனம் செலுத்தப் போவதாக சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு, சொந்த ஊருக்கு சென்று விட்டார். அங்கு சென்று தனது உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தியதன் பயனாய் செம ஸ்லிம்மா மாறிட்டாங்க லட்சுமி மேனன்.
இப்ப ஆளே அடையாளம் தெரியாமல் ஸ்கூலுக்கு போற பச்சை குழந்தையாகவே மாறிட்டாங்க.
அதிலும் குறிப்பாக தற்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தில், பிளாக் frock-கை அணிந்தபடி கண்ணாடி முன்னாடி எடுத்த போட்டோவில் பத்து வயசு குழந்தையா தெரிகிறார்.
மேலும் இவர், சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் ரொம்ப ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல், தனது ஸ்லிம்மான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடிகிறார்.

laxmi-menon
ஆகையால் லஷ்மிமேனன் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கப் போவதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் இனி வரும் நாட்களில் லஷ்மிமேனனுக்கு பல பட வாய்ப்புகள் குமிவது உறுதி என்ற எண்ணத்துடன் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.
