Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஸ்கெட்ச் படத்தின் மாஸான ப்ரோமோ வீடியோ.!
விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் படம் ஸ்கெட்ச். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார், மேலும் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல் ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஸ்கெட்ச் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது காரணம் விக்ரம் அனைத்து படத்திலும் ஏதாவது ஒரு புதிய முயற்ச்சியை மேற்கொள்வதுதான்.
சமீபத்தில் தான் விகரம் அப்பா மரணம் அடைந்தார் அதனால் ஸ்கெட்ச் படம் கிடப்பில் கிடந்துவிடும் என அனைவரும் நினைத்தார்கள் ஆனால் ஸ்கெட்ச் படத்தின் ப்ரோமோ விடியோவை வெளியிட்டார்கள் இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.
இந்த படம் வருகிற 12 ம் தேதி ரிலீஸ் ஆகிறது விக்ரம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிரபல திரையரங்கமான ஜிகேசினிமாஸ் சென்னை போரூர் தியட்டரில் ரசிகர்களின் சிறப்பு காட்சி காலை 6 மணிக்கு திரையிடுகிறார்கள். இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
