Tamil Cinema News | சினிமா செய்திகள்
சர்கார் படத்தின் ஒரிஜினல் போஸ்டர் பார்த்திருப்பீங்க, அதோட ஸ்கெட்ச் எப்படி இருந்தது என்று பார்க்கணுமா ?
தளபதி 62
‘துப்பாக்கி, கத்தி’ ஆகிய 2 மெகா ஹிட் படங்களுக்கு பின் மீண்டும் விஜய் மற்றும் முருகதாஸ் இணையும் படம் சர்கார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் மூன்று போஸ்டர்களை ரிலீஸ் செய்தார்கள். நேற்றில் இருந்து இந்த போஸ்டர்கள் ட்ரெண்டிங் தான்.
கோபி பிரசன்னா

Gopi Prasanna
இவர் தான் இந்த போஸ்டர்களை டிசைன் செய்தவர். கத்தி, தெறி, மெர்சல் தொடர்ந்து தற்பொழுது நான்காவது முறையாக விஜய் படத்தில் இணைத்துள்ளார் இவர்.

Gopi Prasanna Filmography
ஆரண்யகாண்டம் படத்தில் ஆரம்பித்து, ராஜா ராணி, ஓகே கண்மணி, இறுதி சுற்று, காற்று வெளியிடை, விக்ரம் வேதா, சோலோ, கோலமாவு கோகிலா, 96 என்று லிஸ்ட் நீண்டு கொண்டே தான் செல்கிறது.
இந்நிலையில் இவர் தன் பேஸ் புக் பக்கத்தில் அந்தந்த போஸ்டருடன், இவர் ஸ்கெட்ச் செய்து வைத்த படத்தையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.

Sarkar Flp
அச்சு அசலாக இவர் வடிவமைத்தது போலவே போட்டோக்களை கிளிக்கியது இவரின் திறன் மேல் விஜய் மற்றும் முருகதாஸ் வைத்துள்ள நம்பிக்கையை அது காட்டுகிறது.

Sarkar slp
Charge ur phones… Full brightness please… 6pm #Thalapathy62FLToday #Thalapathy62
— Gopi Prasannaa (@gopiprasannaa) June 21, 2018
அடுத்ததாக இந்த பதிவை படித்து விட்டு, உங்களின் போனில் பிரய்ட்நஸ் அதிகப்படுத்திவிட்டு மீண்டும் அந்த போஸ்டர்களை பாருங்கள், வேற லெவெலில் பல விஷயங்கள் உங்களுக்கு புரிய வரும்.
