விக்ரம் ஸ்கெட்ச் சென்சார் ரிப்போர்ட்:

விக்ரம் நடிப்பில் விஜய் சந்தர் இயக்கத்தில் கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் படம் ஸ்கெட்ச். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார், மேலும் ஸ்ரீப்ரியங்கா, ராதாரவி, வேல் ராமமூர்த்தி, சூரி, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

vikram sketch

ஸ்கெட்ச் படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது காரணம் விக்ரம் அனைத்து படத்திலும் ஏதாவது ஒரு புதிய முயற்ச்சியை மேற்கொள்வதுதான்.

sketch

சமீபத்தில் தான் விகரம் அப்பா மரணம் அடைந்தார் அதனால் ஸ்கெட்ச் படம் கிடப்பில் கிடந்துவிடும் என அனைவரும் நினைத்தார்கள் ஆனால் நேற்று ஒரு அறிவிப்பை கொடுத்துள்ளார் படக்குழு.

ஸ்கெட்ச் படத்தின் ப்ரோமோ விடியோவை நேற்று வெளியிட்டார்கள் இந்த வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

மேலும் ஸ்கெட்ச் படம் சென்சார் பரிந்துரைக்கு சென்றது நேற்று சென்சார் ரிப்போர்ட் அறிவித்தார்கள்  இந்த படம்  சென்சாரில் U/A சான்று பெற்றுள்ளது.

ஏற்கனவே செங்கல்பட்டு ஏரியாவில் சத்யம் சினிமாஸ் திரைப்படத்தை வெளியிடுகிறது. கேரளாவில் Maxlab படத்தயாரிப்பு மூலம் சுமார் 200 திரையரங்கில் படம் வெளியிடப்படவுள்ளது.

Sketch

மலேசியாவில் மாலிக் ஸ்ரிம்ஸ் கார்ப்ரேஷன் மூலம் 100 இடங்களில் இந்த படம் வெளியாகியுள்ளது. தானா சேர்ந்த கூட்டம் படத்துடன் மோத எல்லா வகையிலும் காய் நகர்த்துகிறார் தாணு யார் வெல்வார்கள் என்பதை பொறுத்திறுந்து பார்ப்போம்.

நிமிர் சென்சார் ரிப்போர்ட்!

பிரபல தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் நிமிர் இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார்.

nimir first look

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக் தன் இந்த படம். படத்தில் மகேந்திரன், நமீதா பிரமோத்,சமுத்திரக்கனி, பார்வதி நாயர்,  எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் என பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

தமிழ் ரீமேக்கிற்கு சமுத்திரக்கனி தான் வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் இந்த படத்தில் பணியாற்றிகிறார்கள்.

இந்த படத்தின் சென்சார் நேற்று செய்யப்பட்டது . படத்திற்கு U சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜனவரி இறுதியில் படத்தை வெளியிட தீவிரம் காட்டி வருகிறார் இயக்குனர்.

ஏற்கனவே சென்ற ஆண்டு வெளியான பொதுவாக என் மனசு தங்கம்,சரவணன் இருக்க பயமேன் படங்கள் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. மன உலைச்சலில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் இந்த நிமிர் படத்தை மலைபோல் நம்பியுள்ளார்.