Connect with us

Cinemapettai

sivakarthikeyan-sk16

Cinema News | சினிமா செய்திகள்

எம்ஜிஆர் படத்தின் டைட்டிலை பிடித்த சிவகார்த்திகேயன்.. அந்தர் மாஸ் தலைப்பு

சிவகார்த்திகேயன் நடிக்கும் SK16 படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். அதனை பற்றி பார்க்கலாம்.

கடைக்குட்டி சிங்கத்தின் இயக்குனர் பாண்டியராஜ் தான் இந்த படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறார். கடைக்குட்டி சிங்கம் படத்தின் கதை குடும்ப பாங்காக அமைக்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது SK16 படத்தில் எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி நடித்த எங்க வீட்டு பிள்ளை படத்தின் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எம்ஜிஆர் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

SK16 படத்தின் படப்பிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது, இதில் யோகி பாபு, சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, அணு இமானுவேல் போன்ற முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர்.

விஸ்வாசம் படத்தின் மூலம் மக்களிடையே நல்ல பெயர் பெற்ற டி இமான் எங்க வீட்டு பிள்ளை படத்தில் இசை அமைக்க உள்ளார்.  மிஸ்டர் லோக்கல், சீமா ராஜா போன்ற படங்கள் மக்களிடையே வரவேற்பு பெறாத சூழ்நிலையில் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top