Entertainment | பொழுதுபோக்கு
பூஜையுடன் தொடங்கிய சிவகார்த்திகேயனின் அடுத்த படம் SK13
Published on
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் மிக விரைவாக உச்சத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறார், இவரின் படத்திற்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பு எகிறி கிடக்கிறது, கடைசியாக வந்த வேலைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
வசுலும் கிடைத்தது, அதனால் சிவகார்த்திகேயன் படம் நல்ல வியாபாரமும் ஆகிவருகிறது இவர் தற்பொழுது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து சிவா ராஜேஷ் குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார், இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்க இருக்கிறார் நேற்று படத்தின் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது சிவாவுக்கு இது 13 வது திரைப்படம்.
