வளர்ந்து வரும் காமெடியன் சிவகார்த்திகேயன் என்ற நிலையில் இருந்து முன்னணி ஹீரோ சிவகார்த்திகேயன் என்ற நிலையை அடைந்து விட்டார். இன்று பிப்ரவரி 17 தன் 33 வயதில் அடி எடுத்து வைக்கிறார்.

SK

அவரின் பிறந்த நாளையொட்டி, பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தின் ஃபர்ஸ் லுக் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்படும் என்ற தகவல்கள் முன்பே வெளியாகின. இது சிவாவின் 12வது படமாகும்.

siva karthikeyan

சிவகார்த்திகேயனின் இந்த அசுர வளர்ச்சிக்கு 24 AM ஸ்டுடியோஸ், ஆர். டி ராஜாவின் பங்களிப்பும் முக்கிய காரணம். ரெமோ, வேலைக்காரன் படங்களை தொடர்ந்து இவர்கள் இணையும் மூன்றாவது படம். அதே போல் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன் படங்களை தொடர்ந்து இயக்குனர் பொன்ராமுடன் இவரை இணையும் மூன்றாவது படம்.

Soori Sivakarthikeyan

சமந்தா ஹீரோயின், டிஇமான் இசை . இப்படத்தில் சூரி, சிம்ரன், நெப்போலியன், லால் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு “சீமைதுரை” என்பது தான் தலைப்பு என்று முன்பே கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் படத்திற்கு “சீமை ராஜா” என தலைப்பு வைத்துள்ளார்.

SK – Sivakarthikeyan -SEEMARAJA – FLP

மேலும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஹீரோ சிவா குதிரையில் கொடியுடன், குதிரையில் இருப்பது போல் உள்ளது. இப்படத்தினை இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி (வியாழக்கிழமை, 13 செப்டம்பர் ) அன்று ரிலீஸ் செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சிவாவின் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் வாழ்த்துகளால் சென்னை அளவிலான ட்ரெண்டிங்கில் #HBDPrinceSivaKarthikeyan இடம்பிடித்துள்ளது. இதன்படி இளவரசர் சிவா வெற்றிக்கொடியுடன் படத்தின் முதல் லுக் ரிலீஸாகிவிட்டது என்று தான் சொல்லத்தோன்றுகிறது.