Tamil Cinema News | சினிமா செய்திகள்
தம்பி ராமையா இயக்கி, நடிக்கும் மணியார் குடும்பம் படத்தின் பர்ஸ்ட லுக் போஸ்டரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!
தம்பி ராமையா
தன சினிமாவின் ஆரம்பகாலத்தில் டி ராஜேந்தர் மற்றும் பி வாசு இருவரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தம்பி ராமையா. அப்படியே நடிப்பது, காமெடி டிராக் எழுதுவது என்று நகர்ந்தது இவர் சினிமா வாழ்க்கை. முரளி – நெப்போலியன் நடித்த “மனுநீதி” மற்றும் வடிவேலுவின் “இந்திர லோகத்தில் நா அழகப்பன்” படத்தை இயக்கியதும் இவரே. எனினும் நடிப்பில் பிஸியாகவே இயக்கத்தை விட்டு விட்டார் இவர்.
உமாபதி
இவரின் மகன் உமாபதி. ‘அதாகப்பட்டது மகா ஜனங்களே’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படம் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல ஒபெநிங் இவருக்கு தரவில்லை. இந்நிலையில் ‘மணியார் குடும்பம்’ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் சமுத்திரக்கனி, விவேக் பிரசன்னா, ம்ரிதுலா ரவி, யாஷிகா ஆனந்த போன்றவர்கள் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்ததோடு மட்டுமல்லாமல் படத்துக்கு இசையமைத்துள்ளதும் தம்பி ராமையா அவர்கள் தானம். இந்நிலையில் இப்படத்தின் முதல் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் தன த்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சினிமாபேட்டை கமெண்ட்ஸ்
தன் மகனுக்காக குருநாதர் டி. ஆர் ஸ்டைலில் அவதாரம் எடுத்து விட்டார் தம்பி ராமையா !
