Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெளியானது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் !
“சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ்”
நடிகர் சிவகார்த்திகேயன் தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை சில நாட்களுக்கு முன் தொடங்கினார். மேலும் அந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக வெளிவரும் படத்தை இயக்குவது அவரின் நெருங்கிய நண்பர் அருண் ராஜா காமராஜ் தான். பாடல்கள் எழுதுவது, இசையமைப்பது, நடிப்பு என்று கலக்குபவர் தற்பொழுது யக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
மேலும் இப்படத்தின் பூஜை கடந்த பிப்ரவரி 19 லால்குடியில் நடந்துள்ளது. சத்தியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் முக்கிய ரோல்களில் நடிக்கவுள்ளனர். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் ரூபன். கலை லால்குடி இளையராஜா. இசை திப்பு நின்னன் தாமஸ்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இன்று மாலை இப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியிடுவதாக சிவா தன் ட்விட்டரில் அறிவித்திருந்தார்.
அது போலவே ஸ்போர்ட்ஸ் ஜானரில் உருவாகும் இப்படத்திற்கு “கனா” என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் சத்தியராஜ் மற்றும் ஐஸ்வர்யா மைதானம் மற்றும் விவசாயநிலம் பின்னணியில் உள்ளது போன்ற முதல் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது.

KANA FLP
கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் ஸ்போர்ட்ஸ் ஆசையை நிறைவேற்ற தந்தை எவ்வாறு பாடுபடுகிறார் என்பதை சொல்லுமா இப்படம் என்று எதிர்பார்ப்பு தற்பொழுது எகிறியுள்ளது.
