சிவகார்த்திகேயன் ப்ரோடுக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவக்கிய சிவா, முதல் படைப்பாக தன் நண்பன் அருண் ராஜா காமராஜுக்கு இயக்குனர் வாய்ப்பு வழங்கினார். இப்படத்தின் பூஜை கடந்த பிப்ரவரி 19 லால்குடியில் நடந்துள்ளது. சத்தியராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் முக்கிய ரோல்களில் நடிக்கவுள்ளனர். மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படம் இது.

நேற்று இப்படத்தின் தலைப்பு கானா என அறிவித்தனர். மேலும் முதல் லுக் போஸ்டரும் வெளியானது. சத்தியராஜ் மற்றும் ஐஸ்வர்யா மைதானம் மற்றும் விவசாயநிலம் பின்னணியில் உள்ளது போல இருந்தது.

KANA FLP
இதோ இப்படத்தின் மோஷன் போஸ்டர்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் ஸ்போர்ட்ஸ் ஆசை நிறைவேற படும் கஷ்டங்களை இப்படம் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சத்தியராஜ் கோச்சி வேடத்தில் நடிக்கிறாரா அல்லது ஐஸ்வர்யாவின் அப்பா வேடத்தில் நடிக்கிறாரா என்பது அடுத்த அப்டேட்டில் தான் தெரியவரும். காத்திருப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here