சனிக்கிழமை, பிப்ரவரி 15, 2025

நெடு நெடுவென வளர்ந்த சிவகார்த்திகேயனின் மகள்.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, தனது விடாமுயற்சியாலும், மங்காத திறமையாலும் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒரு நடிகராகவும் சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

தற்போது இவரது நடிப்பில் ‘அயலான்’, ‘டாக்டர்’ ஆகிய திரைப்படங்கள்  உருவாகி, ரிலீசுக்காக காத்திருக்கிறது.

மேலும் சிவகார்த்திகேயனுக்கு திருமணமாகி இருப்பதும் அவருக்கு ஆராதனா எனும் குழந்தை உள்ளது என்பதும் நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதே போல் ஆராதனா  2018 ஆம் ஆண்டு வெளியான ‘கனா’ என்னும் படத்தில் ‘வாயாடி பெத்த பிள்ளை’ என்னும் பாடலின் சில வரிகளை பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஆராதனா சற்று வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயனின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

அதாவது  தமிழ் சினிமாவில் நம்பத்தகுந்த நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரு திருமண விழாவில் சிவகார்த்திகேயன், அவரது மனைவி மற்றும் மகள் ஆராதனா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் அந்த புகைப்படத்தில் ஆராதனா சற்று வளர்ந்து பள்ளிப்பருவ குழந்தை போல இருப்பதோடு ப்ளூ கலர் டிரஸில் மிகவும் அழகாக காட்சி தருகிறார். இந்த புகைப்படத்தில் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் இந்த திருமண நிகழ்வில் சிவகார்த்திகேயன் குடும்பத்தோடு, டாக்டர் பட இயக்குனரான நெல்சன் திலீப் குமார் அவர்களின் குடும்பமும் கலந்து கொண்டுள்ளது.

Trending News