சிவகார்த்திகேயன்

சின்னத்திரையில் துவங்கிய தன் பயணத்தை வெள்ளித்திரையில் தொடர்ந்து கொண்டு இருக்கிறார் சிவா. பொன்ராமின் சீமராஜ படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்பும் 24ஏ.எம்.ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் படத்தில் தான் நடிக்கிறார்.

‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநர் ரவிக்குமார் இயக்க, ரஹமான் அவர்கள் படத்துக்கு இசை அமைக்கிறார். ஹீரோயினாக ராகுல் ப்ரீத் நடிக்கிறார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது.

Siva Karthikeyan AR Rahman

தயாரிப்பாளர் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் இருவரும் ஏ.ஆர்.ரகுமானை அவர்களை நேரில் சந்தித்து படத்தின் இசை பற்றி பேசியுள்ளனர். அப்பொழுது இவர்கள் எடுத்துக்கொண்ட போட்டோ  இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அதிகம் படித்தவை:  நட்பே ஒரு கோவில் - பிரென்ட்ஷிப் டே ஸ்பெஷல் : மேஷ் அப் வீடியோ உள்ளே !
Siva Karthikeyan- AR Rahman – – Ravikumar

முதல் படத்தில் ‘டைம் மிஷின்’ சம்பந்தப்பட்ட படத்தை இயக்கிய ரவிக்குமார், இந்த முறை வேற்றுக்கிரக வாசிகள் பற்றி படம் எடுக்கிறார். இதில் சிவா விஞ்ஞானி ரோலில் நடிக்கிறார்.