Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினிக்கு கதை சொன்ன எஸ்ஜேசூர்யா! ஐயோ ஆளை விடுப்பா என ஒதுங்கிய ரஜினி
பொதுவாக எல்லா டைரக்டர்களும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு, அந்த எண்ணம் எஸ் ஜே சூர்யா அவர்களுக்கும் வந்தது. அவர் ரஜினியிடம் ஒரு நல்ல ஒரு கதையை எழுதி சொல்லி இருக்கிறார். ரஜினி கதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாராம்.

uyarntha-manithan
இப்பொழுது அந்தப் படத்தில்தான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடிக்கிறார். அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரஜினி வெளியிட்டார் அந்த படம் தான் உயர்ந்த மனிதன். அந்த படம் ஆரம்பத்தில் ரஜினிக்காக எழுதப்பட்ட கதையாம் இந்த படத்தை ரஜினி வேண்டாம் என்று சொன்னாரா அல்லது அமிதாப்பச்சனை சந்தித்து கதை சொல்லும்படி கூறியதாக தகவல் வெளிவந்தது.
இது ஒரு வித்தியாசமான கதை கொண்ட படமாம். கதைப்படி அழகாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஆற்றை தடுத்து வில்லன் தனது ஊருக்கு திரும்பும்படி செய்துவிடுவார். நம் ஹீரோ அந்த ஆற்றை தனது ஊரின் பக்கம் திரும்பவைக்கும் முயற்சியில் இறந்து விடுவார் இதனால் வில்லனை எதிர்த்து தனது தந்தை செய்த முயற்சியை அவரது மகன்கள் அப்பாவின் ஆசை நிறைவேற்றுவார்கள்.
இது ரஜினிக்கு சரியான கதையாகத்தான் இருக்கும் ஆனால் ஏற்கனவே வந்த நதி நீர் பிரச்சினை, காவிரி பிரச்சனை இதெல்லாம் வைத்துப் பார்த்து ரஜினி இந்த படத்தை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டார் அதே நேரம் இந்தப் படம் மிக முக்கியமான படம் அதனால் அமிதாபச்சனை சந்தித்து கதை சொல்லும்படி அவர் கூறினார் என்பது தகவல்.
