fbpx
Connect with us

Cinemapettai

எலியின் அட்டகாச அட்ராசிட்டி ! எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் திரை விமர்சனம் – feel good mo(vie)nster !

Reviews | விமர்சனங்கள்

எலியின் அட்டகாச அட்ராசிட்டி ! எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் திரை விமர்சனம் – feel good mo(vie)nster !

எலி என்பதை பாத்தாலே பொடுசுகளுக்கு டாம் அண்ட் ஜெர்ரி தான் நினைவுக்கு  வரும். ஹாலிவுட்டில் எலி வைத்து எடுத்த பல படங்கள் ஹிட் வகையறா தான். Stuart Little, Mouse Hunt, Ratotuville என அடுக்கிக்கொண்டே போகலாம். அந்த ஜானரில் நம்ம ஊரு படம் என்பதால்; ரிலீசுக்கு முன்பே எதிர்பார்ப்பு ஜாஸ்தி தான். அதனை இப்படக்குழு பூர்த்தி செய்ததா என வாங்க பார்ப்போம் …

EB யில் வேலை செய்பவராக, வள்ளலாரின் போதனைகளை பின்பற்றுபவராக ஹீரோ எஸ் ஜே சூர்யா. வீட்டில் இவருக்கு தேடப்பட்ட மணப்பெண் தான் ஹீரோயின் பிரியா பவானி ஷங்கர். அவர் வீட்டில் தம்மாந்தூண்டு எலி குடைச்சல் குடுக்க ஆரம்பிக்கிறது. மறுபுறம் வில்லன் தனது வைரங்களை மீட்க எடுக்கும் முயற்சி என ஜாலி ரோலர் கோஸ்டர் பயணமே இப்படம். கதை இவ்வளவு சிம்பிளாக இருந்தாலும் மேக்கிங்கில் அசத்தியுள்ளார் இந்த டீம்.

நடிகராக எஸ் ஜே சூர்யா அசத்தியுள்ளார். யோவ் நீ தான் யா நம்ம ஊரு ஜிம் கேரி என பல இடங்களில் சொல்ல தோன்றுகிறது. பாந்தமாக வந்தாலும் தன் முகபாவனையால் அசத்திவிட்டார் பிரியா பவானி ஷங்கர். பல இடங்களில் கருணாகரனின் காமெடி சந்தானம் + கவுண்டமணி இருவரும் சேர்ந்த கலவை என்றே சொல்ல வேண்டும். இவர்கள் ஒருபுறம் எனில் மறுபுறம் கோகுல் பினோய் ஒளிப்பதிவு, ஜஸ்டின் பிரபாகரன் இசை. சாபு ஜோசப் எடிட்டிங் கூடுதல் பிளஸ்.

படத்தின் ரன்னிங் டயம் ஒரு தவிர்க்க முடியாத மைனஸ் ஆகிவிடுகிறது பலரும் செல் போன் எடுத்து நோண்டும் அளவுக்கு எலி வீடு என்று மட்டுமே சுற்றி வருகின்றது.  இரண்டாம் பாதியில் சற்றே சலிப்பு தட்ட ஆரம்பிக்கும் நேரத்தில் கிளைமாக்ஸ் வந்து படம் சுபம் என்றே முடிகின்றது. நம்ம  “நான் ஈ” மாஸ் என்றால் இந்த “மான்ஸ்டர்” பக்கா மாஸ். எலியினை இவ்வளவு தத்ரூபமாக காமித்ததற்கு படக்குழுவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். எலியின் பார்வையில் காட்டிய காட்சிகள் எல்லாம் உலகத்தரம் .

ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை குடும்பத்துடன் சென்று கட்டாயம் ஜாலியாக பார்த்து வரலாம். feel good mo(vie)nster 3.25 / 5.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top