புளூவேல்

தன் இணை இயக்குனர் ரங்கநாதன், டைரக்டர் அவதாரம் எடுக்கும் முதல் படத்தின் போஸ்டரை இயக்குனர் எஸ் ஜே சூர்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இன்றைய சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கேம் விளையாடுவது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகி விட்டது. பொழுதுபோக்கு, மனஅழுத்தம் குறைக்க என பல காரணங்கள் இதற்கு சொல்லப்படலாம்.

அந்தவகையில் சில மாதங்களுக்கு முன் Blue Whale) என்ற விளையாட்டால் பலர் தங்கள் உயிரை இழந்த சம்பவம் உலகத்தையே உலுக்கியது. அதனை மையப்படுத்தி உருவாகும் சமூக திரில்லர் படம் தான் ‘புளூவேல்’ என்கிறார்கள்.

பூர்ணா காவல்துறை உதவி ஆணையாளராக நடிக்கிறார். கேம் ஆடும் சிறுவன் கதாபாத்திரத்தில் மாஸ்டர் கபீஷ் கன்னா நடிக்கிறார். பி.சி.ஷிவன் இசையமைக்கிறார். பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி.மது மற்றும் 8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பி. அருமை சந்திரன் இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.