fbpx
Connect with us

Cinemapettai

ஸ்பைடர், மெர்சல், தளபதி விஜய் பற்றி மனம் திறந்து பேசிய எஸ்.ஜே.சூர்யா.

News | செய்திகள்

ஸ்பைடர், மெர்சல், தளபதி விஜய் பற்றி மனம் திறந்து பேசிய எஸ்.ஜே.சூர்யா.

சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது தான் அவரின் கனவு. அதனை அடைவதற்கு  அவர் எடுத்த கொண்ட ரூட் தான் இயக்குனர் அவதாரம். இயக்குனராக ஹிட் அடித்த இவர், எதிர்பார்த்த அளவு ஹீரோவாக ஜொலிக்க முடியவில்லை.சிறிது காலம் ஒதுங்கியிருந்த இவர், இசை மற்றும் இறைவி படம் வாயிலாக ரீஎன்ட்ரி கொடுத்தார். தற்ப்பொழுது ஸ்பைடர் படத்தில் வெறித்தனமாக ஒரு கலக்கு கலக்கினார்.

அவர் பிரபல இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இருந்து சிறு தொகுப்பு:

ஸ்பைடர்:

ஸ்பைடர் படத்தில் மிகவும் ஆக்ரோஷமான,  சைக்கோ கதாப்பாத்திரம்.  எந்த நடிகருக்குமே ஒரு சவாலான ரோல், அதே சமயம் வித்யாசமான ரோல் என்றாலே எவராக இருந்தாலும் ஒரு தனி புத்துணர்ச்சி ஏற்படும்.

முருகதாஸ் கதை சொல்லும் பொழுதே, இதை பெர்போர்ம் செய்வ்து சவாலாக அமையும் என்று தெரியும். பெண்கள் குழந்தைகள் என்று பலருக்கு என் நடிப்பு ஸ்பைடர் படத்தில் பிடித்துள்ளது. ட்விட்டரில் பலர் சூப்பர் என்று கமெண்ட் செய்துள்ளார்கள். மெர்சல் படத்தையும் அப்படியே ஏற்றுக்கொள்ளவர்கள் என்று நம்புகிறேன்.

முருகதாஸ்- அட்லீ:

ஸ்பைடர் ஷூட்டிங்கில் முருகதாஸ் அவர்கள் நம்மை நம் ஸ்டைலில் நடிக்க வைத்துவிட்டு, பின் அந்த காட்சிக்கு ஏற்றார் போல சில மாறுதல்களை மட்டும் சொல்வார்.

ஆனால் அட்லீ அவரே ஒரு காட்சியை நடித்துக் காட்டிவிட்டு, இதை தான் நான் எதிர் பார்க்கிறான் என்று கூறுவார். நான் இந்தக்கதாபாத்திரத்தின் ஸ்டைல் அட்லீயிடம் இருந்து எடுத்துக்கொண்டதால் தான் என்னால் சுலபமாக நடிக்க முடிந்தது.

மெர்சல்

மெர்சல் படத்தில் என் ரோல் இரண்டு விதமாக இருக்கும். என்னை ஸ்டைலிஷ் வில்லனாக இப்படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள், இதற்கு அட்லீ தான் காரணம். பிளாஷ் பாக் பகுதியில் நான் வரும் காட்சிகள் மிக அருமையாக இருக்கும்.

mersal

விஜயுடனான கூட்டணி:

குஷி படத்தில் இருந்ததை விட விஜய்  இப்பொழுது  மிக பெரிய ஸ்டார் ஆகிவிட்டார், இருந்தாலும் அதே தன்னடக்கத்துடன் தான் உள்ளார் . அவர் கவனம் முழுவதும் நடிக்கப் போகும் காட்சிகளில் தான் உள்ளது. இப்படம் அவரின் ஸ்டார் அந்தஸ்தை நிரூபிக்கும்.

இயக்குனர் vs நடிகர்

நடிகர் எஸ்.ஜே.சூர்யா செய்ததை விட இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா செய்த சாதனைகள் பல மடங்கு அதிகம்.முன்பு நான் நடிகனாக சில தப்பான முடிவுகளை எடுத்தேன். அப்பொழுது நிறைய நபர்கள் நீ நடிப்பதை விட்டு விட்டு, படங்களை இயக்குவதில் கவனம் செலுத்து என்று கூறினார்கள். அவர்கள் என் நலம் விரும்பிகள் தான் , இருந்தாலும் அப்பொழுது எனக்கு மன வேதனை ஏற்பட்டது. இப்பொழுது நிலைமை மாறியுள்ளது, நான் ஏன் இயக்குனராக தொடரவில்லை என்று  அவர்களும் இப்போ புரிந்து கொண்டு விட்டனர்.

மீண்டும் விஜயயை இயக்குவீர்களா?

சில நேரங்களில் நாம் ஒன்று நினைப்போம், கடவுள் வேற ஒன்றை நமக்கு தருவார். இப்பொழுது படங்கள் இயக்கம் ஐடியா எனக்கு இல்லை. நடிகர் எஸ்ஜே.சூர்யாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்பது தான் என் திட்டம். வில்லனாக நடிப்பேன் என்று துளியும் நான் எதிர்பார்க்கவில்லை, அதுவாக அமைந்தது.  நடக்க வேண்டியது நடந்தே தீரும்.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்: நெஞ்சம் மறப்பதில்லை எப்போ ரிலீஸ் ஆகும்?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top