Tamil Cinema News | சினிமா செய்திகள்
மிஸ் பண்ணாதீங்க – வடசென்னை பற்றி தன் கருத்தை பதிவிட்ட எஸ் ஜே சூர்யா.
வடசென்னை
வெற்றிமாறன் – தனுஷ் மூன்றாவது முறையாக இணைந்து பொல்லாதவன், ஆடுகளம் வரிசையில் கொடுத்துள்ள படம் வடசென்னை. மல்டி ஸ்டார்கள் கொண்ட காங்ஸ்டர் ட்ராமா படம். மூன்று பகுதிகளாக வெளியாக உள்ள படத்தின் முதல் பார்ட் வெளியாகி சினிமா ரசிகர்கள், நட்சத்திரங்கள் என அணிவர் பாராட்டையும் பெற்றுள்ளது.

vada chennai
பேசும் பாஷை தொடங்கி லொகேஷன், ஜெயில் செட், கதாபாத்திர பெயர்கள் என அனைத்தும் அசத்தல் பண்ணியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். திரையில் படத்தை பார்க்கிறோமோ அல்லது வடசென்னையில் நுழைந்து ஒரு விசிட் அடிக்கிறோமோ என்ற குழப்பமே நமக்கு வந்துவிடும்.
இந்நிலையில் இயக்குனர் எஸ் ஜே சூர்யா தன் ட்விட்டரில் படத்தை பாராட்டி கருத்தை பதிவிட்டுள்ளார். திரைக்கதை, காட்சி அமைப்பதில் வல்லவரான மார்ட்டின் சோரெஸ்ஸே படத்தினை நார்த் மெட்ராஸ் பின்னணியில் பார்த்தது போல உள்ளது. அருமையான படம். தனுஷ் நுட்பமாக நடித்துள்ளார், அருமை.
“VADA CHENNAI “ like a Martin Scorsese movie in north madras back drop … well made movie … @dhanushkraja acting is very subtle and great , rajan portion superb …. all actors gave a great great performance congrats to dir @VetriMaaran and team.must watch don’t miss it ?sjs
— S J Suryah (@iam_SJSuryah) October 17, 2018
ராஜனின் பகுதிகள் சூப்பர்ப். அணைத்து நடிகர்களும் அருமையாக நடித்துள்ளனர். வாழ்த்துக்கள் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவுக்கு. கட்டாயம் பாருங்க என்று சொல்லியுள்ளார்.
