விஜய்க்கு மட்டும் தான் இது சாத்தியம்.. பேட்டியில் பெருமையாக பேசிய SJ சூர்யா

ஹீரோவாக நடிப்பதை காட்டிலும் தற்போது வில்லனாக நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் எஸ் ஜே சூர்யா. அதுவும் மாநாடு படத்திற்குப் பிறகு அவரது மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. மேலும் தற்போது பல படங்களில் எஸ் ஜே சூர்யா பிஸியாக உள்ளார். இந்நிலையில் ஒரு பேட்டியில் விஜய் பற்றி பெருமையாக பேசி உள்ளார் எஸ் ஜே சூர்யா.

விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட் படமாக வெளியான குஷி படத்தை எஸ் ஜே சூர்யா தான் இயக்கியிருந்தார். இப்படம் விஜய்க்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதன் பிறகு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் டேனியல் ஆரோக்கியராஜ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் எஸ் ஜே சூர்யா மிரட்டியிருந்தார்.

மெர்சல் படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் விஜயுடன் நடித்த அனுபவங்களை எஸ் ஜே சூர்யா பகிர்ந்து கொண்டார். தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் வயது வித்தியாசம் இன்றி அனைவராலும் கவரப்படும்.

இவர் படத்தில் இடம்பெறும் பாடல் மற்றும் நடனத்திற்கு ஏராளமான குழந்தை ரசிகர்கள் உள்ளனர். மேலும் ஆறிலிருந்து அறுபது வயது உடையவர்கள் என வயது வித்தியாசமின்றி ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் விஜய். இதற்கு காரணம் நடிப்பு, நடனம், காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலும் கைதேர்ந்தவர் விஜய்.

இதனால் விஜய் சார் படம் ரிலீஸாகும் போது மட்டும்தான் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது என எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார். அதாவது குடும்பப் பெண்கள் திரையரங்குகளுக்கு வருவது மிகவும் அரிது. ஆனால் விஜய் படம் ரிலீஸாகும் போது குழந்தைகளுடன் குடும்பமாக வந்து படத்தை பார்க்கிறார்கள்.

இது மற்ற ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது நடக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் இது விஜய் படங்களுக்கு மட்டுமே சாத்தியமாக உள்ளது என எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார். மேலும் குடும்ப ஆடியன்சை கவருவதால் தான் விஜய் படங்கள் எப்போதும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்து வருகிறது.

Next Story

- Advertisement -