fbpx
Connect with us

Cinemapettai

அட்லி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா – மிரட்டல் தகவல்!

vijay sj-suryah atlee

News | செய்திகள்

அட்லி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா – மிரட்டல் தகவல்!

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இயக்குனர்களில் முக்கியமானவர் அட்லி. ராஜா ராணி, தெறி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இவர் விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியிலிருந்து தொடங்கவுள்ளது.

இப்படத்தில் சமந்தா மற்றும் காஜல் அகர்வால் கதாநாயகிகளாக நடிப்பார்கள் என ஏற்கனவே கூறப்பட்டு வந்துள்ள நிலையில் இப்படத்தில் நடிகை ஜோதிகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஒரு முக்கியமான அதுவும் எதிர்மறையான ரோலில் நடிக்கபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த நண்பன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா கேமியோ ரோலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top