Tamil Cinema News | சினிமா செய்திகள்
50 வயதாகியும் முரட்டு சிங்கிளாகா வாழ ஆசைப்படும் எஸ் ஜே சூர்யா.. இதெல்லாம் நல்லதுக்கு இல்ல பாஸ்
நடிகராக சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்த எஸ் ஜே சூர்யாவுக்கு முதன் முதலாக கிடைத்தது இயக்குனர் வாய்ப்பு தான். முதல் படத்திலேயே தல அஜித்தை இயக்கும் வாய்ப்பை பெற்று வாலி என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து குஷி என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். தனக்கு கிடைத்த முதல் இரண்டு வாய்ப்புகளில் தோல்வி முகங்களை சந்தித்துக் கொண்டிருந்த மிகப்பெரிய நட்சத்திரங்களுக்கு சினிமாவில் அடுத்த கட்டத்தை நோக்கி எழச் செய்தார்.
அதன்பிறகு எஸ் ஜே சூர்யாவின் நடிகர் ஆசையால் நியூ, கள்வனின் காதலி, இசை, வியாபாரி, திருமகன் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் இதில் நியூ தவிர மற்ற அனைத்து படங்களும் பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கி இருந்தார்.
அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இறைவி படத்தில் இயக்குனர் வேடத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களுக்கு பிடித்துப்போக தொடர்ந்து மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்களில் வில்லனாகவும் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார்.
ஹீரோவாக எஸ் ஜே சூர்யா நடித்த மான்ஸ்டர் படம் இவருக்கு குழந்தைகள் மத்தியில் நற்பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. இந்நிலையில் 50 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் எஸ் ஜே சூர்யாவிடம், ஏன் திருமணம் செய்து கொள்ள யோசிக்க வில்லை என கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு சினிமாவில் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருப்பதாகவும், திருமணம் தனது சினிமா கொள்கைக்கு தடையாக இருக்கும் என்பதால் திருமணத்தின் மீது ஆசை இல்லை எனவும் எஸ் ஜே சூர்யா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
எஸ் ஜே சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை எனும் படம் வெளியீட்டிற்கு காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படமும் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
