எஸ்.ஜே.சூர்யா வாலி படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். ஆனால், அவர் சினிமாவிற்கு வந்ததே நடிக்க தானாம்.சரியான வாய்ப்பு கிடைக்காததால், அவரே இயக்குனராகி பின் நடிக்க ஆரம்பித்தார்.

பெரிதாக யார் மனதிலும் இவர் நிற்கவில்லை.இந்நிலையில் நேற்று வந்த இறைவி படத்தில் இவருடைய நடிப்புக்குறித்து தான் பலரும் பேசி வருகின்றனர். இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

இவர் ஒரு பேட்டியில் ‘முன்பெல்லாம் என் நடிப்பை பார்த்த பல இயக்குனர்கள் ஏதோ ஜோக்கர் வேலை காட்டி தப்பித்துவிடுகிறான் என்று தான் நினைத்தார்கள், இனி அப்படி கூற முடியாது, இறைவி எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்துவிட்டது’ என கூறியுள்ளார்.