fbpx
Connect with us

Cinemapettai

எஸ்.ஜே.சூர்யா,தனுஷிற்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதற்கு இதான் காரணம்!

News | செய்திகள்

எஸ்.ஜே.சூர்யா,தனுஷிற்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதற்கு இதான் காரணம்!

dhanush-sj-suryaகெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆனால் கவுதம் மேனன் கேட்ட கால்ஷீட் தேதிகளை ஏற்கனவே ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா கொடுத்துவிட்டதால், தனுஷுடன் நடிக்கும் வாய்ப்பை சூர்யா இழந்ததாக கூறப்படுகிறது.

ரூ.90 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ஏ.ஆர்.முருகதாஸ்-மகேஷ்பாபு படத்திற்கு முதலில் பாலிவுட்டை சேர்ந்த ஒரு பிரபல நடிகரைத்தான் வில்லனாக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் எஸ்.ஜே.சூர்யாதான் இந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருப்பார் என அவர் முடிவு செய்ததால் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top