fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பிரியா பவானி சங்கரின் முத்த மழையில் SJ சூர்யா.. ரொமான்ஸ், திரில்லரில் வெளிவந்த பொம்மை பட டிரைலர்

Videos | வீடியோக்கள்

பிரியா பவானி சங்கரின் முத்த மழையில் SJ சூர்யா.. ரொமான்ஸ், திரில்லரில் வெளிவந்த பொம்மை பட டிரைலர்

இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் பொம்மை. இப்படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ஏஞ்சல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் பொம்மை படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. படத்தின் பெயருக்கு ஏற்றாற்போல டிரைவர் முழுக்க ப்ரியா பவானி சங்கர் ஒரு பொம்மை போலவே காட்சி அளிக்கிறார்.

அவருடைய அழகும், பேச்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது. எப்போதும் போல எஸ் ஜே சூர்யா தன்னுடைய வித்தியாசமான நடிப்பின் மூலம் அசத்தியுள்ளார். படத்தின் கதை முழுக்க முழுக்க ஒரு பெரிய துணிக்கடையை சுற்றியே நகர்கிறது.

இதில் எஸ்ஜே சூர்யா தனக்கு பிடித்த வேலையான துணிக்கடை நிற்கும் பொம்மைகளை செய்யும் தொழிலை செய்கிறார். இந்நிலையில் தன்னுடைய இளவயதில் காதலியான ப்ரியா பவானி சங்கர் மனதில் நினைத்த எல்லா பொம்மைகளையும் செய்கிறார்.

இதனால் யார் அந்த பொம்மையை தொட்டாலும் எஸ் ஜே சூர்யாவுக்கு மிகுந்த கோபம் வருகிறது. அதன் பிறகு கதை சூடு பிடிக்கத் தொடங்குகிறது. பிரியா பவானி ஷங்கரின் முத்த மழையில் நனைந்த எஸ் ஜே சூர்யா அதன்பிறகு கொலைகாரனாக மாறுகிறார்.

இவ்வாறு ரொமான்டிக் திரில்லர் படமாக எஸ் ஜே சூர்யாவின் பொம்மை டிரெய்லர் வெளியாகியுள்ளது. மேலும் யுவனின் பின்னணி இசை ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் மாநாடு படத்தை போல பொம்மை படம் எஸ் ஜே சூர்யாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
To Top