Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாரதிராஜாவின் இயக்கத்தில் நடித்த எஸ். ஜே. சூர்யா.. அதுவும் இந்த சூப்பர் ஹிட் படத்தில்!!
தமிழ் சினிமாவில் பன்முக கலைகள் தெரிந்த நடிகர்கள் வெகுசிலரே உள்ளனர். அந்த வகையில் முக்கிய பங்காற்றுவது எஸ்.ஜே. சூர்யா. நடிப்பு, இயக்கம், இசை, தயாரிப்பு என அனைத்து விஷயங்களிலும் கைதேர்ந்தவர்.
ஒரு காலத்தில் தல மற்றும் தளபதி ஆகியோர் தடுமாறிக் கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு மறக்க முடியாத வாலி, குஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர். பிறகு நடிக்க ஆரம்பித்ததில் இருந்துதான் இவருக்கு சனிப்பெயர்ச்சி தொடர்ந்தது.
நல்ல இயக்குனர் எடுத்து இருந்த இவர், பிறகு கிளுகிளுப்பு நாயகனாக உருவெடுத்தார். அதன் விளைவு, சிறிது காலம் இண்டஸ்ட்ரியை விட்டு வெளியேர வேண்டியதாயிற்று. பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த இறைவி படத்தின் மூலம் நல்ல நடிகர் என பெயரெடுத்து, தற்போது நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் 1993-ம் ஆண்டு மண் மணம் மாறாத இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்குசீமையிலே படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அண்ணன்-தங்கை பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் இந்த கதையில் ஏ.ஆர். ரகுமான் இசையில் உயிரோட்டத்தை தந்ததால் படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

Kizhakku Cheemayile
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
