Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்திடம் வேலையை காட்டிய எஸ் ஜே சூர்யா.. இதனை சற்றும் எதிர்பார்க்காத தல எடுத்த திடீர் முடிவு
அஜித்குமார் மற்றும் போனிகபூர் கூட்டணியில் கடந்த வருடம் வெளிவந்து வெற்றி பெற்றது நேர்கொண்டபார்வை. இந்த வெற்றியை வைத்து மீண்டும் போனி கபூர் மற்றும் அஜித்குமார் இணைந்து வலிமை படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதன் மூலம் அஜித் குமார் தற்போது போனி கபூரின் குடும்பத்தில் ஒரு நபராக பார்க்கப்படுகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த அளவிற்கு இருவருக்குமான நட்பு அடுத்தடுத்த படங்களின் மூலம் வெளிப்படுத்துகின்றனர்.
இந்த நிலையில் போனி கபூர் அஜித் நடிப்பில் வெளிவந்து ஹிட்டான வாலி படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தை பெற்றுள்ளார். அதனுடன் சேர்ந்து வரலாறு படத்தின் இந்தி ரீமேக் உரிமத்தையும் பெற்றுள்ளார். இதனை பப்ளிக் நோடிஸ்ஸாக நாளிதழில் கொடுக்கப்பட்டதாம், இதனை அறிந்த எஸ் ஜே சூர்யா ஷாக்காகி உள்ளார்.
அதாவது தனக்கும் இதில் பங்கு இருப்பதாக கூறி போனி கபூர் உடன் தொடர்பு கொண்டு 40% வாலி படத்தில் தனக்கும் பங்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளாராம். இதனைக் கேட்டு போனிகபூர் யோசித்து சொல்கிறேன் என்று தெரிவித்து விட்டாராம்.
அஜித் சொல்லித்தான் போனி கபூர் இந்த எடுக்க முடிவு செய்தாராம்.ஆனால் எஸ் ஜே சூர்யா கேட்பதை சற்றும் எதிர்பார்க்க வில்லையாம். இதனால் அஜித்துக்கு சற்று சங்கடமாக ஆகி உள்ளதாம். இனி ஜென்மத்துக்கும் எஸ் ஜே சூர்யாவுக்கு கால்ஷிட் கிடைக்காதாம். வாலி படத்தில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதே கதாபாத்திரத்தில் போனி கபூரின் மகனை நடிக்க வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். எப்பொழுதுமே ரீமேக் ரைட்ஸ் வாங்கும் போது இது போன்ற பிரச்சனைகள் வருவது சகஜம் தான். இதனை எப்படி சமாளிக்கப் போகிறார் படப்பிடிப்பு எப்போது தொடங்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
