அஜித்தின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் வாலி. இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா.

இவர் ஆரம்பத்தில் படங்களை இயக்கினாலும், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் படங்களில் நடிக்க வந்தார். இவருடைய நடிப்பை பலரும் விமர்சித்தனர்.நடிகர் அஜித்தும் எஸ்.ஜே.சூர்யா எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர், ஏன் அவர் நடிக்க வந்தார் என்று தெரியவில்லை என்று ஒரு பேட்டியில் கூறினார்.

ஆனால், இறைவி படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து அனைவரும் பாராட்ட, எஸ்.ஜே.சூர்யா நடிகனாகவும் வெற்றி பெற்றுவிட்டார்.