
தமிழ் சினிமாவில் இயக்குனராக கால்பதித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா. இவ்வளவு ஏன் இன்று முன்னணி நடிகராக இருக்கும் அஜித் மற்றும் விஜய் வைத்து அப்போதே அவர்களுக்கு வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக தொடர்ந்து எஸ் ஜே சூர்யா நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு அதன் பிறகு ஒரு சில படங்களை இவரே இயக்கியும் நடிக்கவும் ஆரம்பித்தார். அதில் ஒரு சில படங்கள் தவிர மற்ற அனைத்தும் ஓரளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.
சமீபகாலமாக எஸ் ஜே சூர்யா பல நடிகர்களுக்கும் வில்லனாக நடித்து வருகிறார். மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து விஜய் ரசிகர்களின் பெரும் பாராட்டைப் பெற்றார்.

சமீபகாலமாக எஸ் ஜே சூர்யா நடிகராகவும் கலக்கி வருவது அனைவருக்கும் அறிந்ததுதான் இறைவி, மான்ஸ்டர் மற்றும் நெஞ்சம் மறப்பதில்லை போன்ற படங்கள் மூலம் தன்னுடைய நடிப்பாற்றலால் நல்ல நடிகர் என்ற பெயரை வாங்கியுள்ளார்.
ஆனால் இவருக்கும் ஒரு வீக்னஸ் உள்ளது என அவரே கூறியுள்ளார். சின்ன வேடமோ, பெரிய வேடமோ இவர் நடிக்கும் படத்தின் முழு கதையை வாங்கிய பிறகுதான் நடிக்க சம்மதிப்பாராம்.
படத்தின் வசனங்கள் அனைத்தும் மக்கப் செய்து பேசும்போது ஒரு சில வசனங்களை மறந்து விடுவாராம் அப்போது பாடி லாங்குவேஜ் மூலம் சமாளித்து டயலாக்கை சரி செய்து விடுவாராம். இதுவே என்னுடைய ஆக்டிங் டெக்னிக் என எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.