சினிமாவில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது தான் அவரின் கனவு. அதனை அடைவதற்கு  அவர் எடுத்த கொண்ட ரூட் தான் இயக்குனர் அவதாரம். தான் இயக்கும் படத்தின் பூஜையின் பொழுதே கதையை சொல்லிவிட்டு, திரைக்கதையில் மிரட்டல் காட்டுவது தான் இவர் ஸ்டைல்.

இயக்குனராக ஹிட் அடித்த இவர், எதிர்பார்த்த அளவு ஹீரோவாக ஜொலிக்க முடியவில்லை.சிறிது காலம் ஒதுங்கியிருந்த இவர், இசை மற்றும் இறைவி படம் வாயிலாக ரீஎன்ட்ரி கொடுத்தார்.

. நடிகரான எஸ் ஜே சூர்யா  பிரின்ஸ் மகேஷ் பாபுவிற்கு ஸ்பைடர் படத்திலும், தளபதி விஜய்க்கு மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்துள்ளார் என்பது நாம் அறிந்த விஷயமே.படங்களில் வில்லனே கெத்தானவராக இருந்தால், ஹீரோ சூர கெத்தாக இருப்பார் என்பது எழுதப்படாத லாஜிக் ஆகும்

பேக் டு பேக் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த  எஸ் ஜே சூர்யா கடந்த சில நாட்களில் மொத்தம் 26  ஸ்கிரிப்ட் கேட்டுவிட்டுட்டு, இறுதியாக மூன்று ப்ரொஜெக்ட்களை  ஒகே செய்துள்ளாராம். இதில் கொசுறு செய்தி என்ன வென்றால் மனிதர் மூன்றிலும் ஹீரோவாக நடிக்கப்போகிறாராம்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: இயக்குனர் எஸ் ஜே சூர்யா, வி ரியலி மிஸ் யு.