மாநாடு எஸ்.டி.ஆர் படம் அல்ல.. நடிப்பில் சிம்புவை ஓரங்கட்டிய மாஸ் நடிகர்

பல தடைகளை தாண்டி நேற்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான படம் தான் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் டைம் லூப் பாணியில் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கிட்டத்தட்ட வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா போன்ற ஒரு மாஸான படம் தான் மாநாடு.

கதைப்படி துபாயில் பணியாற்றும் சிம்பு, தன் நண்பனின் திருமணத்திற்காக கோயம்புத்தூருக்கு வருகிறார். திருமணம் செய்யப்போகும் பெண்ணை கடத்தி தன் நண்பன் பிரேம்ஜியுடன் சேர்த்து வைக்க திட்டம் போடும் சிம்பு திட்டமிட்டபடி திருமணப் பெண்ணை கடத்தி செல்கிறார். அப்படி செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்படுகிறது.

இந்த விபத்தால் போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவிடம் சிம்பு மற்றும் நண்பர்கள் மாட்டிக் கொள்கிறார்கள். நண்பர்களை பணைய கைதியாக வைத்து முதலமைச்சரை கொலை செய்ய சொல்கிறார் எஸ்.ஜே.சூர்யா. நண்பர்களை காப்பாற்ற வேறு வழியில்லாமல் முதலமைச்சரை சுட்டு கொல்கிறார் சிம்பு. அதன்பின், போலீஸ் சிம்புவை கொன்று விடுகிறது.

இந்த சம்பவம் சிம்பு வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நடக்கிறது. அப்போதுதான் தான் டைம் லூப்பில் மாட்டிக்கொண்டதை சிம்பு உணர்கிறார். பின்னர் அதில் இருந்து எப்படி வெளியே வருகிறார், பிரச்சனையை சமாளித்தாரா என்பதுதான் கதை. ஆனால் இதில் ஒரு ஹீரோவாக சிம்பு ஸ்கோர் செய்ததைவிட வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஸ்கோர் செய்துவிட்டார்.

நடிப்பில் சிம்புவை விட எஸ்.ஜே.சூர்யாவை தான் பலரும் பாராட்டி வருகிறார்கள். இவரது நடிப்பு, டயலாக மாடுலேஷன் என அனைத்தையுமே மிகவும் பர்ஃபெக்ட்டாக செய்துள்ளார். சிம்புவின் படம் மாநாடு என்பதை தாண்டி எஸ்.ஜே.சூர்யா படம் மாநாடு எனும் அளவிற்கு அவரது நடிப்பு திறமை சிம்புவை பீட் செய்து விட்டது.

முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் யை விட வில்லன் கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதியை தான் அனைவரும் பாராட்டினார்கள். அதேபோல தற்போது மாநாடு படத்திலும் ஹீரோவான சிம்புவை விட வில்லனான எஸ்.ஜே.சூர்யா தான் அனைவரது பாராட்டை தட்டிச் சென்றுள்ளார். சமீபகாலமாக ஹீரோ வில்லன் என்பதை தாண்டி நடிப்பிற்கு மட்டும் தான் ரசிகர்கள் முன்னுரிமை அளித்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்