எஸ் ஜே சூர்யா படம் இயக்கி நீண்ட நாட்களாகிவிட்டது. அவர் கடைசியாக இயக்கி நடித்த திரைப்படம் இசை. இந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இருந்தாலும் அவரது பழைய படங்கள் போல ரசிகர்களை முழுவதும் கவரவில்லை.
ஆனால் சமீபகாலமாக நடிகராக பயங்கரமாக உருவெடுத்துள்ளார் எஸ் ஜே சூர்யா. எஸ் ஜே சூர்யா நடிக்கும் படங்கள் அனைத்துமே வரிசையாக சூப்பர் ஹிட்டடித்து வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் மான்ஸ்டர் என்ற படத்தின் மூலம் குழந்தை ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்து விட்டார். அடுத்தடுத்து எஸ் ஜே சூர்யா நடிப்பில் பொம்மை, இறவாக்காலம் போன்ற படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக உள்ளன.
ஹீரோவாக மட்டுமல்லாமல் குணசித்திர வேடங்களிலும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். அதிலும் சிவகார்த்திகேயனுடன் டான், சிம்புவுடன் மாநாடு ஆகிய படங்களில் இவரது கதாபாத்திரம் எப்படி இருக்கப்போகிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக விஜய் சேதுபதி விரைவில் எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் தொடர்ந்து இணையதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இது குறித்து விசாரிக்கையில் தற்போதைக்கு எஸ்ஜே சூர்யாவுக்கு இயக்குநராகும் எண்ணம் இல்லை எனவும், நடிகராக இன்னும் உச்சத்தை தொட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் எனவும் கூறுகின்றனர். ஆனால் இந்த கூட்டணி அமைந்தால் கண்டிப்பாக செம்மையாக இருக்கும் என்றே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
