Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரியா பவானி சங்கருடன் உருகி உருகி ரொமான்ஸ் செய்யும் எஸ் ஜே சூர்யா.. செம வைரல்
மான்ஸ்டர் படத்திற்கு பிறகு எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் ஒன்று சேர்ந்து நடிக்கும் திரைப்படம் பொம்மை. பயணம் படத்தை இயக்கிய ராதாமோகனின் இந்த படத்தை இயக்கி வருகிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை எஸ் ஜே சூர்யா ஏஞ்சல் ஸ்டுடியோஸ் எனும் சொந்த தயாரிப்பில் தயாரித்து வருகிறார்.

bommai-01
மான்ஸ்டர் படத்தில் எஸ் ஜே சூர்யாவுக்கும் ப்ரியா பவானி சங்கருக்கும் இடையில் நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசினார். இந்நிலையில் அதனைத் தொடர்ந்து பொம்மை படத்திற்கும் பிரியா பவானி சங்கர் சரியாக இருப்பார் என இயக்குனர் விரும்பியதால் நடித்து வருகிறார்.

bommai-02
இருந்தும் இடையில் பிரியா பவானி சங்கருக்கும் எஸ் ஜே சூர்யாவுக்கும் காதல் மலர்ந்து விட்டதாக செய்திகள் காட்டுத்தீ போல் பரவி ஆரம்பித்தன. இதற்கு உடனடியாக எஸ் ஜே சூர்யா தன் தரப்பிலிருந்து பிரியா பவானி சங்கர் தனக்கு ஒரு நல்ல நண்பர் என அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

bommai-03
இந்நிலையில் மீண்டும் பொம்மை படத்தின் பாடல் காட்சிகளின் புகைப்படங்கள் இருவருக்கும் உள்ள நெருக்கத்தை குறிப்பிடுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பொம்மை படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டனர். விரைவில் இந்த படம் வெளியாகும் என எஸ் ஜே சூர்யா தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
