Connect with us
Cinemapettai

Cinemapettai

rithika

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நடிகர்களுக்கு போட்டியாக சிக்ஸ் பேக் வைத்த கோலிவுட் நடிகை…

தமிழ் சினிமாவில் அதிகரித்து இருக்கும் சிக்ஸ் பேக் கலாச்சாரத்தில் நடிகர்களை தொடர்ந்து இளம் நடிகை ஒருவரும் இறங்கி இருப்பது கோலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. கோலிவுட்டில் சிக்ஸ் பேக் வைப்பது ட்ரெண்ட் செட்டாகவே மாறி இருக்கிறது. அதிலும், தங்களை பிட்டாக காட்டிக்கொள்ள விரும்பும் நடிகர்கள் உடற்பயிற்சி செய்து கடினமாக போராடி சிக்ஸ் பேக்ஸ் வைத்து அடுத்த படத்தில் அதனுடன் காட்சியளிக்கும் போது ரசிகர்கள் செய்யும் ஆரவாரமே அவர்களுக்கு பூஸ்ட்டாக இருக்கிறது.

இப்பட்டியலில் தனுஷ், சிம்பு, விக்ரம், சூர்யா என முன்னணி நாயகர்கள் அதிரடியாக கலக்கி விட்டனர். சமீபகாலத்தில், விவேகம் படத்தில் அஜித் வைத்த சிக்ஸ் பேக்ஸ் தான் பெரும் வரவேற்பை பெற்றது. காரணம் அஜித் செய்து கொண்ட ஆபரேஷன்களால் அவரால் உடற்பயிற்சியே செய்ய முடியாது என்ற சமூக கேலியை ஒரே படத்தால் புறந்தள்ளியவர். சரி இதெல்லாம் தெரிஞ்ச கதை தான் இப்போ என்ன புதுசானு கேட்குறீங்களா?

நடிகர்கள் மட்டுமே இந்த ட்ரெண்டில் இன்று வரை இருந்து வருகின்றனர். நடிகைகள் உடற்பயிற்சியில் அதீத ஈடுபாடு காட்டினாலும், உடல் அழகை சற்று கடினமாக மாற்ற யோசிக்க மாட்டார்கள். ஆனால், தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ஒருவர் சிக்ஸ் பேக்ஸ் வைத்திருப்பது கோலிவுட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

அட வேறு யாருமில்லை… நடிகை ரித்திகா சிங் தான் அது. சிறு வயதில் இருந்தே கிக்பாக்ஸிங்கில் பயிற்சி பெற்ற இவர் இயக்குனர் சுதா மூலம் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் படமான இறுதிச்சுற்றில் தனது உண்மை கதாபாத்திரத்தையே செய்திருந்த ரித்திகா பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.

தொடர்ந்து, விஜய் சேதுபதியுடன் ஆண்டவன் கட்டளை, ராகவா லாரன்ஸுடன் சிவலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றாலும் தன் சிறு வயது கனவான கிக் பாக்ஸுங்கில் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கிறார் ரித்திகா. தற்போது தனது சிக்ஸ்பேக்ஸ் திரும்பி வந்து விட்டதாக அவர் டூவிட்டி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

rithika

rithika

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top