80, 90களில் ரஜினி கமலுக்கு டஃப் கொடுத்த 6 ஹீரோக்கள்.. மறைந்தாலும் நம் மனதில் விட்டு நீங்காத இதயம் முரளி

80, 90களில் அதிக அளவில் மக்களை கவர்ந்த சில நடிகர்கள் இப்பொழுது முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடித்து புகழ் பெற்றிருக்கிறார்கள். அதிலும் இன்று வரை நம் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் இதயம் முரளி.

மோகன்: இவர் கன்னட மொழியில் கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். பின்பு 1980 ஆம் ஆண்டில் வெளிவந்த மூடுபனி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து நெஞ்சத்தை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை போன்ற வெற்றி திரைப்படங்களை வரிசையாக நடித்தார். அதிலும் இவருக்கு அதிக அளவில் பெயரும் புகழும் கிடைத்த மௌன ராகம், மெல்ல திறந்து கதவு, ரெட்டைவால் குருவி, பாடு நிலவே போன்ற படங்களால் முன்னணி நடிகர்களுக்கு இணையாக பெயரை சம்பாதித்தார். பின்பு தயாரிப்பிலும், இயக்குவதிலும் ஆர்வத்தை காட்டினார். ஆனால் துரதிஷ்டவசமாக எந்த படமும் சரியாக அமையாமல் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது.

கார்த்திக்: இவர் 80, 90களில் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தார். 1981 ஆம் ஆண்டு அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர் 1984 ஆம் ஆண்டு நல்லவனுக்கு நல்லவன் என்ற படத்தில் ரஜினிகாந்துக்கு எதிரான கேரக்டரில் நடித்ததற்காக பார்வையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து அதிகமான வெற்றி படங்களை நடித்து மக்களிடமிருந்து நவரச நாயகன் என்ற பட்டத்தை தட்டி சென்றார்.

Also read: நவரச நாயகன் கார்த்திக் பாடிய 7 பாடல்கள்.. 90களில் பட்டையை கிளப்பிய சாங்

சுரேஷ்: இவர் எடிட்டிங் மற்றும் நடன உதவியாளராக தான் சினிமாவிற்குள் நுழைந்தார். பின்பு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த பன்னீர் புஷ்பங்கள் படத்தில் நடிகராக ஆரம்பித்து வணிக ரீதியாக வெற்றி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து 80களில் தமிழ் திரையில் முக்கிய முகமாக திகழ்ந்து வந்தார். பின்பு 90களில் சில படங்களில் நடித்த பிறகு தெலுங்கு படத்தில் அதிக கவனத்தை செலுத்தினார். அவ்வப்போது தமிழ் படங்களுக்கு கௌரவ தோற்றத்திற்கு நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

பாண்டியன்: இவர் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த மண்வாசனை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் வணிகரீதியாக அதிக லாபத்தை கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இவர் 75 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். பின்பு அரசியல் ஈடுபாடு காரணமாக அரசியலில் இணைந்தார். 2008 ஆம் ஆண்டு இவருக்கு ஏற்பட்ட கல்லீரல் பிரச்சனையால் உயிரிழந்தார்.

Also read: தியேட்டரில் 18 பேரை கண்டு கதறி அழுத பாண்டியராஜன்.. பின் ரஜினியால் வெற்றிகண்ட படம்

முரளி: தமிழில் பூவிலங்கு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் இதயம் என்ற படத்தின் மூலம் மிகவும் ரசிகர்களிடையே பிரபலமானார். பின்பு மணிக்குயில், என் ஆசை மச்சான், பூமணி, பொற்காலம் போன்ற படங்களில் மூலம் அதிகமான பாராட்டுகளை பெற்றார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இவர் 2006 ஆம் ஆண்டு பாசக்கிளி என்ற படத்தில் பிரபுவுடன் இணைந்து நடித்தார். பின்பு இவரது மகன் அதர்வா நடிகராக அறிமுகமாகிய பாணா காத்தாடி என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு இவரின் 46வது வயதில் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டார். ஆனாலும் இன்று வரை நம் மனதில் நீங்காத ஒரு இடத்தை பெற்றிருக்கிறார்.

பாண்டியராஜன்: இவர் நடிகர், இயக்குனர் மற்றும் நகைச்சுவையான நடிகர் என்று பல பரிமாணங்களில் நடித்திருக்கிறார். இவர் கன்னி ராசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார். பின்பு ஆண்பாவம் படத்தை இயக்கி அதில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இவர் சுமார் 90 படங்களுக்கும் மேல் தமிழில் நடித்து இருக்கிறார். இவர் இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இவரால் தொடர்ந்து  நடிகராக வர முடியாமல் போய்விட்டது.

Also read: இறந்து போன 5 ஹீரோக்களின் கடைசி படம்.. கடைசிவரை ஒருதலை காதலனாக சுற்றி திரிந்த இதயம் முரளி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்