எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பட்டையை கிளப்பும் 6 நடிகைகள்.. ஒன்னுக்கொன்னு சளைத்ததில்லை

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சவாலான கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதற்கேற்றார் போல் உடல் பாவனையை மாற்றிக்கொண்டு நடிக்கும் நடிகைகள் உண்டு. அவ்வாறு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசத்தலான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர் மனதில் இடம் பிடித்த 6 நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

மனோரமா: நாடகப் பின்னணியில் இருந்து வந்த ஆச்சி மனோரமா 1960-களாக இருந்தாலும் 2000 பின் காலமானாலும் மனோரமா ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில்ஜில் ரமாமணி, சம்சாரம் அது மின்சாரம் படத்தில் கண்ணம்மா, சின்ன தம்பி, சின்ன கவுண்டர், சாமி, சிங்கம் போன்ற பல படங்களில் இவருடைய நடிப்பு மிகவும் பிரமிக்க வைத்தது.

சில்க் ஸ்மிதா : 80, 90களில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் சில்க் ஸ்மிதா. பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடுவதாக இருந்தாலும், குணச்சித்திர வேடமாக இருந்தாலும் அனைத்திலும் தன் முத்திரையைப் பதித்துள்ளார் சில்க் ஸ்மிதா. அலைகள் ஓய்வதில்லை படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டினார்கள்.

வடிவுக்கரசி : தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கு மேலாக இடைவெளியின்றி நடித்தவர் நடிகை வடிவுக்கரசி. சிவாஜியுடன் இவர் நடித்த முதல் மரியாதை படம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன் பொருத்திக்கொண்டு நடிப்பதில் வல்லவர் வடிவுக்கரசி. அருணாச்சலம் படத்தில் வடிவுக்கரசி கூன் கிழவியாக நடித்ததே இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

காந்திமதி : தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை அழவும், சிரிக்கவும் வைத்தவர் நடிகை காந்திமதி. இவருடைய திரை வாழ்க்கை கருப்பு வெள்ளை காலம் முதல் தொடங்கி, கலர் படங்கள் வரை தொடர்ந்து நடித்தார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், கரகாட்டக்காரன் என பல படங்களிலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசத்தியிருப்பார்.

ஜோதிகா : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் கிராமத்துப் பெண், மாடன் பெண் என அனைத்து கதாபாத்திரங்களிலும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சந்திரமுகி படத்தில் இவருடைய நடிப்பு பலரையும் பிரமிக்கச் செய்தது. தற்போதும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார்.

ஆண்ட்ரியா : தமிழ் சினிமாவில் நடிகை மற்றும் பின்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இவர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் என தன்னுடைய ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார். ஆண்ட்ரியாவின் நடிப்பு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது.

Next Story

- Advertisement -