Connect with us

Cinemapettai

நடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி

ajith-vijay-movie-fan-made

Cinema News | சினிமா செய்திகள்

நடிக்க மறுத்த விஜய்.. காசு வாங்காமல் நடித்து கொடுத்த அஜித்.. தயாரிப்பாளர் பேட்டி

அஜித் படத்தை தயாரித்த சிவசக்தி பாண்டியன் அவரது ஆரம்ப கால நினைவுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்தார். அதில் சில சூழ்நிலைகள் காரணமாக விஜய் நடிக்க முடியாமல் இருந்த படத்தை பற்றியும் அதே படத்தில் அஜித் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த செய்தியையும் கூறினார்.

விஜய்யிடம் வாய்ப்பு

பட வினியோகஸ்தர் வேலையை செய்து கொண்டிருந்த சிவசக்தி பாண்டியன் அதில் ஏற்பட்ட சில நஷ்டத்திற்கு பிறகு படத்தை தயாரிக்க முடிவு செய்தார். அதன்பின் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரிடம் பேசினார். ஆனால் எஸ்ஏ சந்திரசேகர் ஒரு படத்தைத் தயாரித்துக் கொண்டு வா பின்பு அந்த படத்தை எப்படி விளம்பரம் செய்கிறாய் என்பதை பார்த்து விட்டு வாய்ப்பு தருகிறேன் என்று கூறினார்.

அந்தப் படம்தான் வான்மதி அதன்பின் அஜித்திடம் இந்த கதையை சொன்ன பிறகு அஜித் பணம் வாங்கிக் கொள்ளாமல் நடித்துக் கொடுத்தார்.

மீண்டும் விஜய்யிடம் வாய்ப்பு

வான்மதி படத்தின் வெற்றிக்குப் பின் மீண்டும் சிவசக்தி பாண்டியன் விஜய்யிடம் கதை சொல்லியுள்ளார். ஆனால் கால்ஷீட் ஒத்து வரவில்லை. அதனால் அஜித்திடம் அந்த கதையை சொல்லியுள்ளார். அந்த படம் தான் காதல் கோட்டை. இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த படத்திலும் அஜீத் பணம் வாங்கிக்கொண்டு நடிக்கவில்லையாம். இரண்டு படங்களுமே மெகா வெற்றி பெற்றது எனவும் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top