fbpx
Connect with us

Cinemapettai

விரைவில் படமாகும் சிகப்பு ரோஜாக்கள் பார்ட் 2.. கமலஹாசனை மிஞ்சும் சைக்கோ நடிகரை களமிறக்கும் தயாரிப்பாளர்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விரைவில் படமாகும் சிகப்பு ரோஜாக்கள் பார்ட் 2.. கமலஹாசனை மிஞ்சும் சைக்கோ நடிகரை களமிறக்கும் தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாரதிராஜா, 70களில் கிராமத்து பாணியில் படங்களை இயக்குவதில் அதிக கவனம் செலுத்தினார்.

திடீரென்று அவருடைய ஸ்டைலை மாற்றி சைக்கோ கில்லராக கமலை சித்தரித்து உருவாக்கிய திரில்லர் படம் தான் “சிகப்பு ரோஜாக்கள்”.

இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை தயாரிப்பதற்கு பாரதிராஜாவின் மகன் மனோஜ் ரொம்பவே ஆர்வம் காட்டி வருகிறார். அவ்வபோது தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று ரசிகர்களை ஏங்க வைத்தார்.

தற்போது வெளியான தகவலின்படி ‘சிகப்பு ரோஜாக்கள் 2’ படத்தினை பாரதிராஜாவிற்கு பதிலாக அவருடைய மகன் மனோஜ் இயக்கவிருக்கிறாராம்.

தங்கமீன்கள் பட இயக்குனர் ராமுவுடன் சேர்ந்து, இந்த படத்திற்கான ஸ்கிரிப்டை முழு மூச்சில் ரெடி பண்றதாக, மனோஜ் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கவிருக்கிறாராம், ஏற்கனவே சிம்பு மன்மதன் படத்தில் சைக்கோ கில்லராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதனாலேயே இந்தப் படத்தில் அவருக்கு இந்த ரோல் கச்சிதமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

சும்மாவே நடிகைகளை எக்கச்சக்கமான கிசுகிசுபிற்கு ஆளான சிம்பு, இந்தப்படத்திலும் விட்டுவைக்காமல் நெட்டிசன்கள் வறுத்தெடுக்க போவது உறுதிதான்.

Continue Reading
To Top