Tamil Cinema News | சினிமா செய்திகள்
யோகா பண்ணி என்ன பிரயோஜனம்.. விஜயகாந்த் எவளோ பரவால.. கோபத்தில் வெடித்த சிவகுமார்
பிரபலங்கள் எவ்வளவு நல்லது செய்கிறார்களோ அதேபோல் அவர் செய்யும் ஒரு சிறு தவறு வெகுவிரைவாக மக்களிடம் போய் சென்றடைகிறது. இன்று நடந்த ஒரு திறப்பு விழாவில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார் அவர் தன்னுடன் செல்பி எடுக்க வந்த ஒரு ரசிகரின் செல்போனை தட்டி விட்டது மிக பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிலும் ஒரு கோபத்துடன் அந்த போனை தட்டிவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆக பார்க்கப்படுகிறது. நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு காரணம் இருப்பதாக தெரிகிறது அது என்னவென்று அவர் வாயால் கூறும் வரை நாம் காத்திருக்க வேண்டியதுதான்.
#Sivakumar #SivakumarShouldApologize
ரசிகரின் போனை சிவகுமார் தள்ளிவிட்ட விவகாரம்! காரணம் என்னவா தான் இருக்கும். pic.twitter.com/UjPiNhQDuz— Cinemapettai (@cinemapettai) October 29, 2018
சமூகத்தில் ஒரு நல்ல இடத்தில் இருந்து இப்படி ஒரு செயல் பண்ணதுக்கு மக்களுக்கு வேதனை அளிப்பதாக தெரிகிறது. விரைவில் இந்த தவறான நிகழ்வுக்கு என்ன காரணம். நடிகர் சிவக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
‘செல்பி எடுப்பது என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வெளியே சென்றால் செல்பி எடுக்கலாம். கொடைக்கானல், ஊட்டி, தொட்டபெட்டா போல சுற்றுலாதளங்களுக்கு சென்றால் செல்பி எடுக்கலாம். அங்கு எப்படி வேண்டுமானாலும் போட்டோ எடுக்கலாம். அதை பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை.
ஆனால் பொது இடத்தில் பலர் இருக்கும் போது செல்பி எடுப்பது தவறு. பொது இடத்தில் மொத்தம் 300 பேர் இருக்கும் இடத்தில் செல்பி எடுப்பது தவறு. நான் காரில் இருந்து இறங்கி விழா மண்டபத்திற்கு செல்வதற்கு முன் என்னுடைய பாதுகாவலர்களை எல்லாம் தள்ளிவிட்டுவிட்டு வரிசையாக பலர் வந்து செல்பி எடுத்து எனக்கு இடையூறு செய்வது சரியா?
என்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா? விஐபி என்றால் இப்படி புகைப்படம் எடுப்பதில் நியாயம் இருக்கிறதா? நான் எத்தனை பேருடன் எத்தனை விழாக்களில், எத்தனை பொது இடங்களில் புகைப்படம் எடுத்து இருக்கிறேன் தெரியுமா? நான் ஒன்றும் புத்தன் கிடையாது. எல்லோரையும் போல நானும் மனிதன்தான். எனக்கு பிடித்தமான ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
என்னை யாரும் தலைவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும். என்னை பின்பற்ற வேண்டும் என்று யாரிடமும் நான் கூறவில்லை. ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கைக்கு ஹீரோ தான். நாம் அடுத்தவர்களை எந்தளவுக்கு துன்புறுத்துகிறோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும் என்று நடிகர் சிவகுமார் தனது விளக்கத்தில் கூறியுள்ளார்.
