Connect with us
Cinemapettai

Cinemapettai

surya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சூர்யா ஒரு பக்கம் ரகளை.. அவர் அப்பா சிவகுமார் ஒரு பக்கம் ரகளை

சூர்யா தன் பாதி பிஸியான நாட்களை சினிமா மட்டுமில்லாமல் மக்களுக்காக செலவிடும் ஒரு முக்கிய நடிகராக வலம் வருகிறார். நடிகர் சிவகுமார் சிறிதளவு செய்த தவறான செயல், செலிபிரிட்டி என்பதால் மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டது அதற்கு அவரும் வருத்தம் தெரிவித்தார்.

வாழ்க்கைல ஒரு சில இடத்துல செய்ற சின்ன சின்ன தவறுகள் வெளியே வரும்போது நாம் செய்த நல்ல விஷயங்கள் அனைத்தும் மறைந்து விடுகின்றன. சிவகுமாரும் சூர்யாவுடன் சேர்ந்து பல நல்லது செய்துள்ளார். ஆனால் உலகம் அதெல்லாம் மறந்துவிட்டது. இவர் செய்ததும் தவறுதான். சற்று குணமா சொல்லிருக்கணும்.. சூர்யா அதனை பற்றியெல்லாம் கவலைபடாமல் அடுத்த அப்டத்தில் நடிக்க  சென்றுள்ளார்.

ஆம்; தற்போது சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே படம் வரும் பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இறுதிசுற்று சுதா கோங்குரா இயக்கத்தில் சூர்யா38 ஆகியவை வரிசையில் உள்ளது. ஏற்கனவே ஹரி மற்றும் சூர்யா கூட்டணியில் இதுவரை வேலு, ஆறு,சிங்கம் 1 2 3 போன்ற படங்கள் வந்துள்ளன. (யோகா பண்ணி என்ன பிரயோஜனம்.. விஜயகாந்த் எவளோ பரவால.. கோபத்தில் வெடித்த சிவகுமார்)

Sivakumar-angry

Sivakumar-angry

அடுத்து சூர்யா39 இயக்குனர் ஹரி இயக்க உள்ளார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது. சிவகுமார் மொபைலை தட்டிவிட்டு ஒரு பக்கம் ரகளை பண்ண, சூர்யா ஒரு பக்கம் சினிமாவில் ரகளை கட்டி வருகிறார். #WeNeedNGKSplOnDiwali என்ற வார்த்தையை சமூகவலைத்தளங்களில் டிரெண்டிங்கில் கொண்டு வந்து தங்களின் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினர் சூர்யா ரசிகர்கள். (பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நடிகர் சிவகுமார் கொடுத்த பரிசு என்ன தெரியுமா ?)

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top