சிவக்குமார் நடிப்பில் மாபெரும் ஹிட்டான 4 படங்கள்.. மனுஷன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துருக்காரு!

தமிழ் சினிமாவில் காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவகுமார். ஆனால் சிவாஜி கணேசனுடன் இவர் நடித்த படங்கள் மட்டுமே அன்றைய காலத்தில் பெரிதாக ஓடியது காரணம் சிவாஜிகணேசன் நடிப்புதான். அதன் பிறகுதான் ஒரு சில படங்களில் கதாநாயகனாக
நடித்து வெற்றி பெற்றார்.

சரஸ்வதி சபதம்: சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான திரைப்படம் சரஸ்வதி சபதம். இப்படத்தில் சாவித்ரி மற்றும் பத்மினி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் சிவகுமார் விஷ்ணு கடவுளாக நடித்திருப்பார். இப்படம் வெற்றிக்கு சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசனின் நடிப்பு தான் காரணம். ஆனால் சிவகுமார் நடித்த விஷ்ணு கதாபாத்திரமும் ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

ராஜராஜ சோழன்: ஏபி நாகராஜன் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம் ராஜராஜ சோழன். இப்படம் முழுக்க முழுக்க ராஜராஜசோழனின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தில் ஹீரோ என்றால் அது சிவாஜி கணேசன் தான். ஆனால் அவருக்கு மகனாக இளவரசனின் கதாபாத்திரத்தில் சிவகுமார் நடித்திருப்பார்.

இப்படம் வெற்றிக்கு சிவாஜிகணேசன் தான் காரணம். ஆனால் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சிவக்குமார் நன்றாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோசாப்பூ ரவிக்கைக்காரி: தேவராஜ் மோகன் இயக்கத்தில் சிவகுமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி. இப்படம் தான் சிவகுமார் வாழ்க்கையை மாற்றியது என்று கூட கூறலாம் ஏனென்றால் சிவகுமாருக்கு 100வது திரைப்படம். அதுமட்டுமில்லாமல் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

தீபா மற்றும் சிவச்சந்திரன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சிவகுமார் ஒரு காலத்தில் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். அவருக்கு ஹீரோவாக நடித்து மிகப் பெரிய வெற்றியடைந்த திரைப்படம் என்றால் ரோசாப்பூ ரவிக்கைகாரி தான். இப்படத்திற்கு பிறகு தான் இவர் ஹீரோவாக பல படங்கள் நடிக்க ஆரம்பித்தார்.

சிந்து பைரவி: கே பாலச்சந்தர் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த திரைப்படம் சிந்து பைரவி. இப்படத்தில் சுகாசினி நடித்துள்ளார். இப்படமும் சிவகுமார் வாழ்க்கையில் மிக முக்கியமான படம். சிவகுமார் நடிப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று அவருக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துக் கொடுத்தது.

அன்றைய காலகட்டத்தில் சிவகுமாருக்கு பெரிய அளவில் ஹீரோவாக நடிப்பதற்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் அதிகமாக சிவாஜி நடிப்பில் வெளியான கந்தன் கருணை,சரஸ்வதி சபதம், உயர்ந்த மனிதன், திருமால் பெருமை மற்றும் பாரத விலாஸ் ஆகிய படங்களிலேயே சிவகுமார் நடித்தார். அன்றைய காலகட்டத்தில் சிவக்குமார் வளர்ச்சிக்கு சிவாஜி கணேசன் ஒரு முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்