பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் வீட்டில் இருந்து அடுத்த சினிமா நட்சத்திரம் தயாராகி உள்ளார்.

தமிழ் சினிமாவில் துணை நடிகராக 1965ல் அறிமுகமானவர் சிவகுமார். பின்னர், பல படங்களில் நாயகனாக நடித்து புகழ் பெற்றார். எம்.ஜி.ஆருடன் 2 படங்களும், ஜெமினி கணேஷனுடன் 7 படங்களும், சிவாஜி கணேஷனுடன் 14 படங்களும் நடித்து இருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனும் 7 படங்களை நடித்து சிறப்பு பெற்றவர். படங்களில் பிஸியாக இருக்கும் போதே, லட்சுமி குமாரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கிறார்.

surya
surya

முதல் மகன் சூர்யா சிவகுமார். 1997ம் ஆண்டு நேருக்கு நேர் திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்தார். அதை தொடர்ந்து, சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாலா இயக்கத்தில் நந்தா படம் மூலம் ரீ -எண்ட்ரி கொடுத்தவர். தற்போது, கோலிவுட்டின் முன்னணி நாயகனாக இருந்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  பிரபு தேவாவை தெறித்து ஓடவிட்ட கார்த்திக்,விஷால் ...!!!

இரண்டாவது மகன் கார்த்தி சிவகுமார். முதுகலை பட்டத்தை அமெரிக்காவில் முடித்த கார்த்தி, மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சினிமாத்துறைக்கு வந்தார். இதன் பிறகு, அமீர் இயக்கத்தில் பருத்திவீரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பல படங்களில் நடித்த கார்த்தி, தற்போது நடிகர் சங்கத்தில் பொருளாளராக இருக்கிறார்.

karthik

சிவகுமாரின் மூத்த மருமகளும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் கோலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர். வாலி படத்தில் துணை நாயகியாக அறிமுகமானாலும், தனது வித்தியாசமான முக பாவனைகளால் ரசிகர்களை கொள்ளை கொண்டவர். பின்னர், சூர்யாவுடன் காதல் வலையில் விழுந்த ஜோதிகா, அவரை 2006ல் திருமணம் செய்து கொண்டார். இக்குடும்பம் இத்தனை நட்சத்திரங்களை கொண்டுள்ளது.

அதிகம் படித்தவை:  கார்த்திக்- கௌதம் கார்த்திக் இணையும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ பட பூஜை.

இந்நிலையில், சிவகுமாரின் மகள் பிருந்தாவும் திரைத்துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். ஆனால், இந்த முறை நடிப்பில் இல்லை பாடகியாக வந்து இருக்கிறார். நவரச நாயகன் கார்த்தி மற்றும் கௌதம் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் மிஸ்டர் சந்திரமௌலி பாடலை பிருந்தா பாடி இருக்கிறார். பாடலுக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் பிருந்தா தொடர்ந்து பாடகியாக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.