Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்.. துள்ளிக்குதிக்கும் ரசிகர்கள்
தமிழ்சினிமாவில் ஒரே வருடத்தில் பல படங்களை வெளியிடுவதில் மிகவும் திறமை வாய்ந்த நடிகர் விஜய் சேதுபதி. கடந்த வருடம் சூப்பர் டீலக்ஸ் கதாபாத்திரத்திற்கு மட்டும் நல்ல வரவேற்பை பெற்ற விஜய் சேதுபதிக்கு மற்ற எந்த படங்களுமே சொல்லிக் கொள்ளும் அளவு ஓடவில்லை.
ஆனாலும் விஜய்சேதுபதியின் மார்க்கெட் இதுவரை குறையவில்லை என்றே கூறலாம். இயக்குனர் பொன்ராமின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்க உள்ளதாகவும் அதையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பொன்ராம் சிவகார்த்திகேயன் வைத்து மூன்று படங்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நான்காவதாக எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்தை சசிகுமார் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது.
பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் நம்பர்-1 நடிகர்களுடன் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் நடிக்க உள்ளார். ஆனால் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
இந்த வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு வந்ததாகவும் ஆனால் பொன்ராம் இயக்கத்தில் வெளியான சீமராஜா படம் தோல்வி அடைந்ததால் இயக்குனரை கழட்டி விட்டதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றனர். இருந்தாலும் தனக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற கமர்ஷியல் ஹிட் கொடுத்ததால் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளாராம்.
