fbpx
Connect with us

விடுமுறையைத் தேடி ஓடும் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்.

News / செய்திகள்

விடுமுறையைத் தேடி ஓடும் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன்.

பொதுவாக திரைப்படங்களின் வெற்றிக்கு பல காரணங்கள் இருக்கின்றன.சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் வெற்றிக்கு ஒரே காரணம்தான்.அவரது படங்கள் வெளியாகும் தினம்.

குறிப்பாக, தன்னுடைய நண்பரின் பெயரில் தொடங்கப்பட்ட 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிக்கான விலாசமாகவே மாறிவிட்டது – வெளியீட்டு தினம்.தொடர்விடுமுறை தினங்களை குறிவைத்து படத்தை வெளியிட்டால் எப்பேற்பட்ட குப்பைப்படங்களையும் மக்கள் வெற்றியடைய வைத்துவிடுவார்கள் என்று மக்களின் பலவீனத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டுவிட்டார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயனின் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் பேனரில் தயாரிக்கப்பட்ட ரெமோ திரைப்படம் கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி வெளியானது.அக்டோபர் 8 மற்றும் 9 சனி, ஞாயிறு வாரவிடுமுறை.

10 ஆம் தேதி ஆயுதபூஜை.
11 ஆம் தேதி விஜயதசமி.
12 ஆம் தேதி மொகரம்.
இப்படியாக தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை தினங்களாக அமைந்ததால்தான் ரெமோ படத்தைப் பார்க்க மக்கள் கூட்டம் திரண்டது. அப்படியும் படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனுக்கு சில கோடிகள் நஷ்டம் என்பது தனிக்கதை.
சிவகார்த்திகேயனின் முந்தையப்படமான ரெமோ படத்துக்கு பின்பற்றிய அதே ஃபார்முலாவில்தான் தற்போது வேலைக்காரன் படத்தையும் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

‘வேலைக்காரன்’ படத்தை ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியிட உள்ளனர்.
அடுத்தடுத்த நாட்கள் விஜயதசமி, மொகரம், காந்தி ஜெயந்தி என தொடர்விடுமுறை தினங்கள்.
இப்படியான கணக்கில்தான், அதாவது ரெமோ படத்துக்கு அமைந்ததைப் போலவே இந்தப் படத்துக்கும் வசூல் கொட்டும் என்ற நம்பிக்கையில், வேலைக்காரன் படத்தின் வெளியீட்டு தேதியாக செப்டம்பர் 29 -ஆம் தேதியை தேர்வு செய்துள்ளனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top